உங்களுக்கு மூட்டு வலி இருக்கா.. இந்த அளவு ஸ்ட்ராபெரி சாப்பிடுங்க.. மாற்றம் தெரியும்..

 
Strawberry

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஸ்ட்ராபெரியில் நிறைந்துள்ளதால், அவை நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஆரோக்கியமான கலவைகள் இதில் உள்ளன. மேலும், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக்குகள் உங்கள் சருமத்தில் நன்றாக வேலை செய்து ஜொலிக்க வைக்கும்.

கேடசின், அந்தோசயனின்கள், குர்செடின் மற்றும் கேம்ப்ஃபெரால் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் ஸ்ட்ராபெரியில் உள்ளன. அவை இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும், நல்ல குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

strawberry

இந்நிலையில் சில ஆய்வுகள் ஸ்ட்ராபெரி சாப்பிடுவதால் கால் வலி சரியாகும் என்று தெரிவிக்கிறது. கால் கப் ஸ்ட்ராபெரி தினமும் சாப்பிட்டால் காலில் உள்ள விக்கம் குறைவதாக 2017ம் ஆண்டு  வெளியான ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், ஸ்ட்ராபெரி நேரடியாக மூட்டு வலியை குணப்படுத்துவதில்லை. அதன் சத்துகள் மற்றும் பழத்தின் தன்மை வலியை குணப்படுத்த உதவுகிறது.

இதில் வைட்டமின் சி உள்ளது. இது கொலஜன் உருவாக்க உதவுகிறது. நமது நமது கார்டிலேஜின் ஆரோக்கியத்திற்கு தேவையாக உள்ளது. இந்த கார்டிலேஜ் தான் நமது மூட்டுகளை காப்பாற்றுகிறது. இதனால் வைட்டமின் சி அதிகம் உள்ள ஸ்ட்ராபெரிகளை நாம் சாப்பிட்டால், கால் வலி ஏற்படுவது குறையும்.

strawberry

மேலும் இதில் ஆந்தோசையனின்ஸ் உள்ளது. இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதனால் மூட்டு வலி ஏற்படாது. வீக்கத்தை உருவாக்கும் TNF-α  என்ற குறியீடை  இது குறைப்பதால், வலி குறையும் மற்றும் விக்கமும் குறையும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மூட்டுகளை பாதிக்காமல் பார்த்துகொள்ளும். மேலும் வலியை போக்கும். ஸ்டாபெரிகளில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட்,  வைட்டமின் சி, மற்றும் விக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது.  

From around the web