கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா..? குறைக்க உதவும் ‘மேஜிக்’ பழங்கள்.. தினமும் ஒன்று சாப்பிடுங்க..!
கொலஸ்ட்ரால் என்றதுமே பலரது நினைவில் வருவது, இது உடலில் தேவையில்லாத ஒன்று மற்றும் பல நோய்களை உண்டாக்கக்கூடியது என்பது தான். கொழுப்பு குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள், வெள்ளை மற்றும் மெழுகுப் போன்ற பொருள் தான் கொலஸ்ட்ரால். இது உடலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக இது உடலில் உள்ள செல்களுக்கான இன்றியமையாக ஒரு கட்டுமானப் பொருளாகும். மேலும் இது சாதாரண உடல் செயல்பாடுகளான பல முக்கிய ஹார்மோன்கள், பித்தம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு அவசியமானவை.
மனித உடலில் சேரும் கொழுப்பு என்பது ஒரு சைலன்ட் கில்லர் போல் செயல்பட்டு பல்வேறு உடல் உபாதைகளை சிறிது சிறிதாக ஏற்படுத்தி இறுதியில் நமது உயிருக்கே உலை வைத்து விடும். இதன் காரணமாகவே நமது இதயத்தை பாதுகாப்பதற்காகவும் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காகவும் சீரான கால இடைவெளியில் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இத்தகைய சூழ்நிலையில், அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த சில மேஜிக் பழங்களை உணவில் சேர்க்க வேண்டும்.
வாழைப்பழம்:
உடல் எடையை அதிகரிக்க பலரும் பயன்படுத்தும் வாழைப்பழம் கொலஸ்ட்ராலை குறைக்கும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா. ஆம், கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவது உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம். வாழைப்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
ஆரஞ்சு:
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதில் ஆரஞ்சு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை இரத்தக் குழாய்களில் இருந்து அகற்ற உதவும். ஆரஞ்சு மட்டுமல்ல, மற்ற சிட்ரஸ் பழங்களையும் உட்கொள்வது கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
அன்னாசிப்பழம்:
கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கும் அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பழம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் புதையலாகும். அன்னாசிப்பழத்தில் இருக்கும் ப்ரோமிலைன், தமனிகளில் சேரும் கொழுப்பை உடைத்து, அதை நீக்குகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
அவகேடோ:
அவகேடோவை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என பல ஆய்வுகளில் நிரூபனமாகியுள்ளது. ஆராய்ச்சியின் படி, இந்த வெண்ணெய் பழத்தில் ஒலிக் அமிலம் உள்ளது, இது உடலில் இருந்து இரத்த ஓட்டத்தின் நடுவில் வரும் கொலஸ்ட்ராலை நீக்குகிறது. இது இரத்தத்தின் தமனிகளை சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
நாவல்:
நாவல் பழத்தில் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன. அவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. உங்கள் உணவில் நாவல் பழங்களை சேர்ப்பதன் மூலம், உங்கள் உடலின் ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம்.