பிளேட்லெட்ஸ் எண்ணிக்கையை இயற்கையாக அதிகரிக்க.. தவறாமல் சாப்பிட வேண்டிய 5 சிறந்த உணவுகள்!
இரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதை த்ரோபோசிட்டோபெனியா என்று மருத்துவ மொழியில் கூறுகின்றனர். ஓ`இரத்த தட்டுகள் இரத்த செல்களில் மிகவும் சிறிய அணுக்களாகும். இது சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களை விட சிறியது. காயங்கள் ஏற்படும் போது இரத்தம் அதிகமாக வெளியேறாமல் தடுக்கவும், இரத்தம் உறைதலுக்கும் இது பயன்படுகிறது. ஒரு இரத்த தட்டணுக்களின் வாழ்நாள் வெறும் 5-9 நாட்கள் மட்டுமே ஆகும். இது நமது உடலில் ஏராளமான எண்ணிக்கையில் காணப்படுகிறது.
பொதுவாக பிளேட்லெட் எண்ணிக்கை 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை இருக்க வேண்டும். பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்தால் அது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். பிளேட்லெட்டுகள் த்ரோம்போசைட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பிளேட்லெட்ஸ் ரத்தம் உறைவதற்கு அவசியமான சிறிய ரத்த அணுக்கள் ஆகும். ஒருவருக்கு பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அதனால் அதிக ரத்தப்போக்கு, சிராய்ப்பு மற்றும் காயங்கள் அல்லது நோய்களில் இருந்து குணமாக நீண்ட நாட்கள் ஆவது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும்.
தினசரி போதுமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சூப்பர்ஃபுட்ஸ்களை சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்ஸ்களின் எண்ணிக்கையை இயற்கையாக உயர்த்த உதவும். எனவே உங்கள் டயட்டில் குறிப்பிட்ட உணவுகளை தவறாமல் சேர்த்துக்கொள்வது பிளேட்லெட்ஸ்களின் ஆரோக்கிய எண்ணிக்கையை பராமரிக்கவும், அவற்றின் எண்ணிக்கையை இயற்கையாக அதிகரிக்கவும் உதவும். கீழ்காணும் சூப்பர் ஃபுட்ஸ்களை தொடர்ந்து எடுத்து கொள்வது இயற்கையாகவே உங்கள் பிளேட்லெட்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். இயற்கை முறையில் பிளேட்லெட்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் உணவுகள் & பழங்கள்.
கோதுமைப்புல் (Wheatgrass):
கோதுமைப் புல்லில் chlorophyll அதிகம் உள்ளது மற்றும் ஹீமோகுளோபினை ஒத்திருக்கிறது, இது பிளேட்லெட்ஸ், சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை இயற்கை முறையில் அதிகரிக்க உதவுகிறது.
பூசணிக்காய்:
அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளதன் காரணமாக பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகளில் ஒன்றாக பூசணிக்காய் உள்ளது. இந்த காய் எலும்பு மஜ்ஜையில் பிளேட்லெட் உற்பத்தியை தூண்டுகிறது மற்றும் புரத ஒழுங்குமுறைக்கு உதவுகிறது.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள்:
வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பிளேட்லெட்ஸ்களை பாதுகாக்கிறது. எனவே வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து டயட்டில் சேர்த்து கொள்வது பிளேட்லெட்ஸ்களின் உற்பத்தியை அதிகரிக்கும். ஆரஞ்சு, கிவி, ப்ரோக்கோலி, கீரை, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் எடுத்து கொள்ளலாம்.
மாதுளை:
மாதுளை விதைகள் பிளேட்லெட்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்களாக செயல்படும் மற்றும் அழற்சியை குறைக்கும் ஊட்டச்சத்துக்கள் இவற்றில் நிறைந்துள்ளன.
மீன் எண்ணெய்:
அதிகமுள்ள புரதச்சத்து நிறைந்த டயட் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதோடு குறைந்த பிளேட்லெட் அளவுகளுடன் தொடர்புடைய கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது. எனவே மீன்கள் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்து கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)