உங்க விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க.. இந்த 8 உணவுகளை டயட்டில் கட்டாயம் சேர்த்துக்கோங்க..!
![Sperm](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/ca95cd491b8f5e4230517ec48f93fca6.webp)
நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒரு குடும்பத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளீர்களா? குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? ஆம். எனில், நீங்கள் முக்கியமான பல விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தையை கருத்தரிப்பது பெண்ணாக இருந்தாலும், அவளை கர்ப்பமாக்குவதில் ஆணின் பங்கு முக்கியமானது. கருத்தரித்தல் ஏற்படுவதற்கு, உங்கள் விந்தணுக்கள் ஆரோக்கியமாகவும், பெண்ணின் கருமுட்டையை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வலுவாகவும் இருக்க வேண்டும். உங்கள் விந்தணுக்களின் தரத்தை பொறுத்து நீங்கள் விரைவாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
உங்கள் விந்தணுவை அதிகரிக்க உதவும் சில உணவுகள் பற்றியே இப்போது இங்கே தெரிந்து கொள்ள போகிறோம். இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்வதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவதோடு பாலியல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
பழங்கள், காய்கறிகள்:
வண்ணமயமான பழங்களும் காய்கறிகளும் நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு எப்போதுமே சிறந்ததாகும். பெர்ரி, ஆரஞ்சு, தக்காளி, கீரைகள், காலே போன்ற பச்சை இலை காய்கறிகளில் அதிகளவு ஆண்டி ஆக்சிடெண்ட் உள்ளது. இவை விந்தணுக்களை பாதிக்கும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் டயட்டில் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துகொள்வதன் மூலம் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம்.
நட்ஸ் மற்றும் சீட்ஸ்:
நட்ஸ் மற்றும் சீட்ஸ்களில் ஆரோக்கிய கொழுப்புகள், புரதம், ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. பாதாம், வால்நட், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றில் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்துகள் உள்ளது.
மீன் மற்றும் கடல் உணவு:
சால்மன், கெளுத்தி, மத்தி மீன்களில் அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் விந்தணுவின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். மேலும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு அவசியமான துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் என்ற இரண்டு தாதுக்களும் மீன் மற்றும் கடல் உணவுகளில் அதிகமாக உள்ளது.
முழு தானியங்கள்:
ஓட்ஸ், சிவப்பு அரிசி, குயினோவா போன்றவற்றில் வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தி ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த முழு தானியங்கள் நீடித்த ஆற்றலையும் ஹார்மோன் சமச்சீராக இருக்கவும் உதவுகிறது. இவை இரண்டுமே விந்தணு உற்பத்திக்கு முக்கியமாகும்.
பருப்புகள்:
பீன்ஸ், பருப்பு, சுண்டல் ஆகியவற்றில் புரதமும் நார்ச்சத்தும் ஃபோலேட் மற்றும் துத்தநாகமும் அதிகமுள்ளது. விந்தணு தரமாக இருக்க ஃபோலெட்டும் விந்தணு உற்பத்திக்கும் டெஸ்டோஸ்டெரோன் அளவுக்கு துத்தநாகமும் அவசியமாகும். ஆகவே உங்கள் டயட்டில் பருப்பு வகைகளைய் சேர்த்து கொண்டால் விந்தணுவின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
லீன் ப்ரோட்டீன்:
கோழிக்கறி, மாட்டிறைச்சி, முட்டை போன்ற லீன் ப்ரோட்டீன் உணவுகளில் விந்தணு உற்பத்திக்கு அத்தியாவசியமான அமினோ ஆசிட் உள்ளது. விந்தணு உருவாவதற்கு முக்கியமாக இருப்பதே புரதம் தான். ஆகையால் உங்கள் டயட்டில் நல தரமான புரத உணவுகளை எப்போதும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பால் பொருட்கள்:
குறைவான கொழுப்பு கொண்ட பால் பொருட்களான தயிர், சீஸ், பால் ஆகியவற்றில் கால்சியம், வைட்டமின் டி ஆகியவை உள்ளது. இது விந்தணுவின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். விந்தணு செயல்பாட்டில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
டார்க் சாக்லேட்:
டார்க் சாக்லேட்டில் ஃப்ளாவோனாய்டு உள்ளது. விந்தணுவின் தரத்தை மேம்படுத்துவதில் இதற்கு நெருங்கிய தொடர்புள்ளது. ஃப்ளாவோனாய்டு ஆண்டி ஆக்ஸிடெண்ட் என்பதால் ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பிலிருந்து விந்தணுவை பாதுகாக்க உதவுகிறது.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)