தினமும் தயிர் சாப்பிட்டால்.. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

 
Curd

உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களால் விரும்பி உண்ணப்படும் பால் சார்ந்த பொருளென்றால் அது தயிர்தான். தயிர் அதன் தனித்துவமான சுவைக்காகவும், ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பல நூற்றாண்டுகளாக உணவிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தயிர் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிருள்ள பாக்டீரியாக்களால் நிறைந்துள்ளது, இது உங்கள் ஆரோக்கியத்தில் பல அதிசயங்களைச் செய்ய முடியும்.

கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மாக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் டி, புரதம், குடலுக்கு நல்லது செய்யும் பாக்டீரியா ஆகியவை தயிரில் இருக்கிறது. செரிமானத்திற்கான அதன் நன்மைகள் மிகவும் பிரபலமானதாக இருந்தாலும், தினசரி தயிர் சாப்பிடுவது நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களைத் தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் தயிர் சாப்பிடுவது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Bone

கால்சியம்:

தயிரில் கால்சியம் சத்து அதிகமுள்ளது. அதுமட்டுமின்றி கால்சியமை நம் உடல் உறிஞ்சுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் வைட்டமின் டி-யும் தயிரில் அதிகமுள்ளது. பழங்கள் அல்லது ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றில் தயிர் கலந்து சாப்பிட்டால் உங்களுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

தயிரில் இருக்கும் ப்ரோபயோடிக் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி பல்வேறு தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது. தயிரில் உள்ள துத்தநாகம் மற்றும் தாதுக்கள் நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலுக்கு நன்மை செய்கிறது.

பளபளப்பான சருமம்:

தயிரில் உள்ள பாக்டீரியா நமது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுப்பதோடு நல்ல நிறத்தையும் தருகிறது. இதிலுள்ள லாக்டிக் ஆசிட் அரிப்பு மற்றும் வீக்கத்தை குறைத்து சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. தயிரில் செய்யப்பட்ட ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துவதால் வடுக்கள், முகப்பரு, கருந்திட்டுகள், துளைகள் போன்றவை குணமாகின்றன.

Vagina

பெண் பிறப்புறுப்பு ஆரோக்கியம்:

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியா உடலில் உள்ள pH அளவை சமனிலைப்படுத்தி பெண்களின் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ஈஸ்ட் தொற்று ஏற்படாமலும் பெண்களின் உடலை ஊட்டம் பெற வைக்கிறது.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

From around the web