உச்சம் தொடும் தங்கம். . ஒரு லட்சத்தை எட்டுமோ?

 
Gold-Price

அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் உலகப் பொருதார நிலைக்கேற்ப தங்கத்தின் விலை ஏறியும் இறங்கியும் வந்து கொண்டிருக்கிறது.

இன்று (மார்ச் 31)  தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8.425-க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.67,400-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ரூ.72,952-க்கு விற்பனையாகிறது.

இப்படியே ஏறிக்கொண்டே போனால் ஒரு பவுன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய் என்றாகிவிடுமோ?