டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.. பட்டியலிடும் நிபுணர்கள்

 
Dark Chocolate

டார்க் சாக்லேட் சுவையானது மட்டுமல்ல, அளவாக உட்கொள்ளும் போது பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. டார்க் சாக்லேட் நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீசு மற்றும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்கின்றன.

2024-ம் ஆண்டில் இந்தியாவின் சாக்லேட் சந்தையின் மதிப்பிடப்பட்ட அளவு சுமார் 2.31 பில்லியன் டாலர் ஆகும், மேலும் இது 2030-ம் ஆண்டில் இது 3.58 பில்லியனை டாலர் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் 2024 மற்றும் 2030-ம் ஆண்டுகளுக்கு இடையில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி விகிதம் 7.58 சதவீதம் ஆகும். கடந்த 2022-ம் ஆண்டு நிலவரப்படி சுமார் 44 சதவீத இந்தியர்கள், சாக்லேட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக ஹை-குவாலிட்டி சாக்லேட்ஸ்களை வாங்கி டயட்டில் சேர்க்க தயாராக இருந்தனர். IMARC-ன் மார்க்கெட் ரிசர்ச் ரிப்போர்ட்டின்படி, பலரும் டார்க் சாக்லேட்ஸ்களை விரும்பி வாங்குகின்றனர். இவற்றில் குறைந்த சர்க்கரை மற்றும் அதிக கோகோ இருப்பதால் டார்க் சாக்லேட் ஆரோக்கியத்திற்கு நல்லது என கூறுகின்றனர்.

Dark Chocolate

சாக்லேட் ஏன் மூட் லிஃப்ட்டர் (mood lifter) என கூறப்படுகிறது?

சாக்லேட் நமது மனநிலையை உயர்த்தவும், நம்மை நன்றாக இருப்பதை போலவும் உணர உதவுகிறது. பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை HOD-ஆன ராஜேஸ்வரி ஷெட்டி இதுகுறித்து பேசுகையில், செரோடோனின் (Serotonin) என்பது நம் மனநிலையை கட்டுப்படுத்தும் ஒரு நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் ஆகும், மேலும் சாக்லேட்டில் tryptophan எனப்படும் ஊட்டச்சத்து உள்ளது, இது செரடோனின் கட்டுமான தொகுதியாக (building block) செயல்படுகிறது. நாம் எப்போதெல்லாம் சாக்லேட் சாப்பிடுகிறோமோ அப்போது, ​​​​நம் உடல் அதிக செரோடோனின் உற்பத்தி செய்ய tryptophan-ஐ பயன்படுத்தி கொள்கிறது. இது நம்மை அமைதியாக மற்றும் திருப்தியாக உணர உதவுகிறது.

நிபுணர்கள் கூறும் டார்க் சாக்லேட்டின் ஆரோக்கிய நன்மைகள்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் அபாயம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இது குறித்து டாக்டர் மஞ்சுஷா அகர்வால் கூறியதாவது, டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்ட்ஸ் ரத்த நாளங்களை தளர்வாக வைக்கும் அதே நேரம் அதிகரித்து காணப்படும் BP-யை குறைக்கும். மேலும் டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில், HDL எனப்படும் நல்ல கொழுப்பில் அளவை உயர்த்தும் என்கிறார். சர்க்கரை இல்லாத டார்க் சாக்லேட்டை நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் மிதமான அளவில் சேர்த்து கொள்ளலாம் என டாக்டர் ராஜேஸ்வரி ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.

Dark Chocolate

எவ்வளவு சாக்லேட் எடுத்து கொள்வது மிக அதிகம்? 

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி ஒரு சிறிய அளவிலான டார்க் சாக்லேட் (குறைந்தது 70 சதவீத கோகோவை கொண்டிருக்கும்) எடுத்து கொள்வது அவர்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். சர்க்கரை இல்லாத டார்க் சாக்லேட்டை நீரிழிவு நோயாளிகள் டயட்டில் சேர்க்கலாம், ஆனால் அளவாக எடுத்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சிறிய பீஸ் டார்க் சாக்லெட் சாப்பிடலாம், இதற்கு மேல் கூடாது என்கிறார் பிரபல உணவியல் நிபுணரான ராஜேஸ்வரி ஷெட்டி.

இது குறித்து கூறிய டாக்டர் மஞ்சுஷா அகர்வால், சாக்லேட் நுகர்வில் மிதமான அளவு எப்போதும் முக்கியம். ஏனென்றால் அதிகம் சாக்லேட்சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் எடையை அதிகரிக்க செய்யலாம் கூடவே செரிமான பிரச்சினைகள், இரைப்பை குடல் பிரச்சனைகள், இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு அதிகப்படியான சாக்லேட் நுகர்வு வழிவகுக்கலாம் என எச்சரித்தார்.

Dark Chocolate

சீனியர் டயட்டிஷியனான ரியா தேசாய் பேசும் போது, வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு சாக்லேட்களை சாப்பிடுவதால் பிரச்சனை ஏற்படாது. பொதுவாக சாக்லேட்ஸ் கொழுப்பு நிறைந்தவை என்பதால், கொஞ்சம் சாப்பிட்டால் கூட அது வயிறை நிரம்ப செய்து உங்களின் வழக்கமான உணவை சரியாக சாப்பிட முடியாமல் செய்து விடும். எனவே போதுமான நாள் இடைவெளியில், மிதமான அளவில் (ஒன்று அல்லது இரண்டு சிறிய பீஸ்) எடுத்து கொள்வது முக்கியம், குறிப்பாக தினசரி சாக்லேட் சாப்பிட கூடாது என்றார்.

From around the web