தங்கம் விலை கிடுகிடு உயர்வு! அமெரிக்க டாலர் தான் காரணமா?

 
Gold

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம், 7 ஆயிரத்து 150 ரூபாயாக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் 15 காசுகள் குறைந்து, 85 ரூபாய் 54 காசுகளாக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி தொடருமா அல்லது இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டு வருமா என்று தெரியவில்லை.இந்திய ரூபாய் மேலும் வீழ்ச்சி அடைந்து ஒரு டாலருக்கு 90 ரூபாய் வரை செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தங்க விலையில் மட்டுமல்லாமல் பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, இன்று 450 புள்ளிகள் குறைந்து, 78 ஆயிரத்து 248ஆக சரிந்துள்ளது.

 

From around the web