சருமம் முதல் இதய ஆரோக்கியம் வரை.. முள்ளங்கியின் அளவில்லா மருத்துவ குணங்கள்.!

 
Raddish

உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேண இயற்கை நமக்கு அளித்த உணவுப் பொருள் தான் காய்கறிகள். இந்த காய்கறிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அனைத்துமே நிறைந்துள்ளன. காய்கறிகளில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் முள்ளங்கி. இந்த முள்ளங்கியானது ஒரு வேர் காய்கறி. அதாவது பூமிக்கு அடியில் வளரக்கூடியது.

ஆனால் முள்ளங்கியை கண்டாலே பலரும் தலைதெறிக்க ஓடுவார்கள். ஏனெனில் இதன் மணம் சற்று மோசமாக இருக்கும். என்ன தான் இதன் வாசனை மோசமாக இருந்தாலும், இதனுள் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. முள்ளங்கி இரண்டு நிறங்களில் கிடைக்கும். ஒன்று வெள்ளை; மற்றொன்று பிங்க். இதில் வெள்ளை நிற முள்ளங்கி பரவலாக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

Raddish

நீங்கள் முள்ளங்கியை சாப்பிட மறுப்பவரானால், இக்கட்டுரையை தவறாமல் படியுங்கள். ஏனெனில் இந்த முள்ளங்கியை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டால், நிச்சயம் இதை சாப்பிட மறுக்கமாட்டீர்கள். இப்போது ஏன் ஒருவர் முள்ளங்கியை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:

முள்ளங்கியில் அதிகளவு வைட்டமின் சி உள்ளதால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி நமக்கு வரக்கூடிய சளி, இருமல் தொல்லையிலிருந்து இது பாதுகாக்கிறது. இதன் பலன் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் முள்ளங்கியை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தீங்கு நிறைந்த ஃப்ரீ ரேடிகல்ஸ், வீக்கம், வயதான தோற்றம் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் முள்ளங்கி உதவுகிறது.

குறைவான கலோரி:

முள்ளங்கியில் குறைவான கலோரிகளே இருப்பதால், உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு சிறந்த ஸ்னாக்ஸாக இது இருக்கும். மேலும் உடல் எடை குறைப்பிற்கு மறைமுகமாக உதவி புரியும் செரிமான இயக்கத்திற்கும் இது நல்லது செய்கிறது.

Raddish

செரிமானத்திற்கு உதவுகிறது:

முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலம் கழிப்பதை ஒழுங்குபடுத்துவதிலும் மலச்சிக்கல் வராமல் தடுப்பதிலும் பெரும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி செரிமானத்திற்கு முக்கியமானதாக இருக்கும் பித்த உற்பத்தியை அதிகப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது முள்ளங்கி.

இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:

முள்ளங்கியில் அந்தோசைனின் மற்றும் பிற கலவைகள் உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Raddish

சரும ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது:

முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடெண்ட் சரும பாதிப்புகள் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் வயதான தோற்ற அறிகுறிகளை குறைத்து சருமத்தில் பளபளப்பை அதிகரிக்க உதவுகிறது.

வைட்டமின் சி அதிகமுள்ளது:

மிகவும் சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட்டான வைட்டமின் சி முள்ளங்கியில் அதிகம் உள்ளது. இது செல்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி ஆரோக்கியமான சருமம் மற்றும் கண்களுக்கும் முள்ளங்கி உதவியாக இருக்கிறது.

From around the web