ஆளி விதைகளை இப்படி செய்து சாப்பிடுங்க.. 7 நாளில் சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்!
ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் உயர் தரமான புரோட்டீன்களின் சிறந்த மூலப் பொருட்கள் தான் நட்ஸ் மற்றும் விதைகள். அதனால் தான் எடை இழப்பு உணவுத் திட்டத்தில் இவை முக்கியமான ஒரு உணவுப் பொருட்களாக பரிந்துரைக்கப்படுகின்றன. எடையை இழக்கும் முயற்சியில் இருக்கும் போது ஒரு கையளவு நட்ஸ் சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, பசியும் கட்டுப்படுத்தப்படும்.
நட்ஸ் மற்றும் விதைகளில் பாதாம், முந்திரி, வால்நட்ஸ், சூரியகாந்தி விதைகள், பூசணிக்காய் விதைகள் போன்றவை ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள். அதில் ஆளி விதையும் முக்கியமான ஒன்று. பல்வேறு நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை ஆளி விதைகள் குறைக்கின்றன. மேலும் இது புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட்ஸ்களின் சிறந்த மூலமாகும் உள்ளது. சத்தான கலோரிகள், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, புரதம், தாமிரம், மெக்னீசியம், ஜிங்க், இரும்பு மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட பல சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
உண்மையில் ஆளிவிதைகள் ஒரு மல்ட்டிபர்பஸ் மூலப்பொருள் (ingredient) ஆகும், இது பல உணவின் சுவையை மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தையும் மேம்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கவும், உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆளிவிதைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் சில எளிய வழிகள் உள்ளன.
ஆளிவிதை பொடி:
மயோ கிளினிக்கின் கூற்றுப்படி, பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆளி விதையை முழுவதுமாக தூளாக்கி பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள். இப்படி செய்வதால் ஆளிவிதை எளிதாக ஜீரணமாகி விடுமாம். ஆளிவிதையானது நம் செரிமான அமைப்பு வழியாக செரிக்கப்படாமல் சென்றால், அதன் நன்மைகள் முழுமையாக நமக்கு கிடைக்காமல் போகலாம் என்பதால் இதனை பவுடராக்கி டயட்டில் சேர்க்க சொல்கிறார்கள் நிபுணர்கள்.
ஆளிவிதை கஞ்சி:
உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சத்தான உணவு தேர்வாக இருக்கிறது ஆளிவிதை கஞ்சி. காலை உணவில் பெரு பவுல் ஆளிவிதை கஞ்சி தயார் செய்து அதில் பாதாம், சுகர் சிரப், பால் மற்றும் ஃபிரெஷ்ஷான பழங்களை சேர்த்து சுவைக்கலாம்.
ஆளிவிதை எண்ணெய்:
ஆளிவிதை ஆயிலில் ஆல்ஃபா-லினோலெனிக் ஆசிட் (ALA), நம் உடலுக்கு தேவைப்படும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ஏராளமாக உள்ளது. ஆளி விதைகளில் காணப்படும் பொருட்கள் முடக்கு வாதம் (rheumatoid arthritis) தொடர்பான வீக்கம் மற்றும் அழற்சியை குறைக்க உதவுகின்றன.
ஆளிவிதை ஸ்மூத்தி:
காலையில் உங்களுக்கு நேரமில்லாவிட்டால் அல்லது மற்றும் காலை உணவை முழுவதுமாக சமைக்க முடியாவிட்டால் எளிதாக செய்து சாப்பிட கூடிய உணவுகளில் ஒன்றாக ஆளிவிதையுடன் கூடிய Smoothies இருக்கும். நிறைய ஊட்டச்சத்துக்களை ஆளிவிதைகள் வழங்குவதால் காலை நேர உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் மற்றும் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் ஸ்மூத்திகளுக்கு இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் டயட்ரி ஃபைபரை வழங்கும் அற்புதமான பொருளாகவும் ஆளிவிதைகள் இருக்கும்.
ஆளிவிதை மீல் (FlaxSeed Meal):
மார்க்கெட்களில் கிடைக்கும் FlaxSeed Meal என்னும் தயாரிப்பானது ஆளிவிதை எண்ணெயை பிரித்தெடுக்கும் செயல்முறையைத் தொடர்ந்து, பிரித்தெடுப்பதன் துணைப் பொருளாக FlaxSeed Meal தயாரிக்கப்படுகிறது. ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட Ground whole ஆளிவிதைகள் இதை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இது மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கிறது மற்றும் உடலில் சேரும் தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ராலை குறைப்பதோடு செரிமானத்தை மேம்படுத்துகிறது.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)