வெற்றிலையினால் கிடைக்கும் 10 அற்புத உடல்நல நன்மைகள் தெரியுமா?

 
Betel Leaves

வெற்றிலை என்பது இதய வடிவில், வளுவளுப்பாக, பளபளப்புடன் நீண்ட காம்புகளை கொண்டுள்ளதாகும். இந்தியாவில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒரிசா போன்ற மாநிலங்களில் வெற்றிலைகள் பயிரிடப்படுகிறது. பழங்காலத்தில் இருந்தே இதனை வாசனை ஊக்கியாகவும், வாயுவை தடுக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுரத்தல் மற்றும் இரத்த கசிவு போன்றவற்றை தடுத்து நிறுத்தி, பாலுணர்ச்சி ஊக்கியாகும் விளங்குகிறது. வீட்டு சிகிச்சை பலவற்றிற்கும் இது பயன்படுகிறது.

வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின் மற்றும் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளதோடு, கால்சியத்தின் சிறந்த ஆதாரமாகவும் உள்ள வெற்றிலை பல நோய்களை தீர்க்கும் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. அதே போல வெற்றிலைகள் அபரிமிதமான சிகிச்சை ஆற்றலைக் கொண்டுள்ளன. கடுமையான காரம் போன்ற சுவையை கொண்டிருக்கும் வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்பு சரியான விகிதத்தில் சேர்த்து போடும் போது நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலையில் வைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மேலும் வெற்றிலையில் காணப்படும் கார குணம் வயிறு மற்றும் குடலில் உள்ள pH ஏற்றத்தாழ்வுகளை திறம்பட நடுநிலையாக்கி, செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கிறது.

Pain

வலி நிவாரணி:

வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள் காரணமாக ஏற்படும் வலியை போக்க இதை பயன்படுத்தலாம். இளஞ்சூடான வெற்றிலை பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். அதே போல வெற்றிலை சாறு உடலில் உள்ள உள் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்:

வெற்றிலைகள் உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை அழிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தியாக உள்ளது. இது உடலில் நார்மல் PH அளவை மீட்டெடுக்க உதவுகிறது. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற வெற்றிலை சாப்பிடுவது ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. குடல் சார்ந்த சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெற இரவு நேரத்தில் வெற்றிலையை நசுக்கி தண்ணீரில் போடவும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கவும்.

செரிமானம்:

நன்கு சாப்பிட்ட பிறகு குறிப்பாக மதிய உணவிற்கு பிறகு பலரும் ஏன் வெற்றிலையை மென்று சாப்பிடுகிறார்கள் என்பதை பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வெற்றிலையின் கார்மினேடிவ், வாயு எதிர்ப்பு மற்றும் குடலைப் பாதுகாக்க உதவும் பண்புகளுக்காக உணவை சாப்பிட்ட பிறகு இதனை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதோடு மற்றும் முக்கிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச வெற்றிலைகள் நம்முடைய குடலை தூண்டுகின்றன.

Digestion

சுவாச பிரச்சனைகள் குறையும்:

மார்பு சளி, நுரையீரல் அடைப்பு மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கு வெற்றிலைகள் சிறந்த நிவாரணம் அளிக்கும். குறிப்பாக இருமல் மற்றும் சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு வீட்டு மருந்தாக வெற்றிலை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெற்றிலையில் சிறிது கடுகு எண்ணெய் தடவி சூடாக்கி மார்பில் வைத்தால் congestion பிரச்சனை குணமாகும்.உங்களுக்கு சுவாச பிரச்சனைகள் இருந்தால் அதிலிருந்து நிவாரணம் பெற இரண்டு கப் தண்ணீரில் ஏலக்காய், கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டையோடு சில வெற்றிலைகளை சேர்க்கவும். பின்னர் இதனை 1 கப் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க வைத்து நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று முறை பருகவும்.

பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்:

வெற்றிலையில் அற்புதமான ஆன்டிசெப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வெற்றிலைகளில் இருக்கும் பாலிபினால்கள் சாவிகோல் கிருமிகளிலிருந்து இரட்டைப் பாதுகாப்பை வழங்குகிறது. வெற்றிலைகள் பூஞ்சை தொற்றுகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.

வாய்வழி ஆரோக்கியம்:

வெற்றிலையில் ஏராளமான ஆண்டிமைக்ரோபியல் ஏஜென்ட்ஸ் உள்ளன, இவை வாயில் வசிக்கும் பல பாக்டீரியாக்களை எதிர்த்து திறம்பட போராடுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு துவாரங்கள், பிளேக் மற்றும் பல் சிதைவு போன்ற சிக்கல்களையும் உருவாக்குபவை. பல்வலி, ஈறு வலி, வீக்கம் மற்றும் வாய்வழி தொற்றுகளை நீக்க வெற்றிலைகள் உதவுகின்றன.

Diabetes

நீரிழிவு நிலை:

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் வெற்றிலை பொடியை தங்கள் டயட்டில் சேர்த்து கொள்வதால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு சீர்காக இருக்கும் என பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. வெற்றிலை ஒரு வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதால் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் கட்டுப்பாடற்ற ரத்த குளுக்கோஸ் காரணமாக ஏற்படும் அழற்சியை குறைத்து நீரிழிவு நிலையை நிர்வகிக்க உதவுகிறது.

மூட்டு வலிக்கு நிவாரணம்:

வெற்றிலைகளில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியம், வலியை கணிசமாக குறைக்க உதவுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட எலும்புகள், மூட்டுகள் வலி மற்றும் வீக்கத்தின் தீவிரத்தை கணிசமாகக் குறைக்கின்றன.

Cancer

கேன்சரை தடுக்கிறது:

வெற்றிலை ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் anti-proliferativeபண்புகளைக் கொண்ட பினாலிக் கலவைகளால் நிரம்பியுள்ளது. இவை தவிர வெற்றிலைகளில் கேன்சரை எதிர்த்துப் போராடும் பண்புகளை கொண்ட பைட்டோ கெமிக்கல்ஸ்களும் உள்ளன.

மனச்சோர்வை போக்கும்:

மத்திய நரம்பு மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டைத் தூண்டும் இயற்கை மருந்தாக வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. catecholamines என்பது ஒரு நியூரோட்ரான்ஸ்மிட்டர் ஆகும், இது மனநிலையை மேம்படுத்தி நல்வாழ்வுக்கு உதவுகிறது. வெற்றிலையில் இருக்கும் அரோமேட்டிக் ஃபினாலிக் காம்பவுண்ட்ஸ் கேடகோலமைன்ஸ்களின் வெளியீட்டை தூண்டுகிறது. எனவே வெற்றிலையை மென்று சாப்பிடுவது மன அழுத்தத்தை போக்க ஒரு எளிய வழியாகும்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

From around the web