உங்களுக்கு மூல நோய் பிரச்சனையா? தினம் கொஞ்சம் ரோஜா இதழ்களை இப்படி செஞ்சு சாப்பிடுங்க!!

 
Rose petal

ரோஜா பூக்களுக்கெல்லாம் அரசி. காதலின் சின்னம். அதன் அழகிற்கு ஈடு வேறெந்த பூவிற்கும் இல்லை என சொல்லலாம். காதல் முதல் கல்யாணம் வரை அதற்கென ஸ்பெஷலான இடம் எல்லாவற்றிலும் உண்டு. ரோஜா அழகுத் துறையிலும் கொடிக்கட்டிப் பறக்கிறது. சரும பொலிவிற்கு ரோஜாவின் இதழ்களே அதிகம் அழகு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது.

அழகில் மட்டுமா? உடல் நலத்திலும்தான். ரோஜாப் பூக்கள் பலவித மருத்துவ குணங்கள் கொண்டது. நோய்களை போக்கும் தன்மை பெற்றது. ஃபினைல் எத்தானல், க்ளோரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற மிக அருமையான வேதிச் சத்துக்கள் ரோஜாப் பூக்களில் அடங்கியுள்ளன. இப்படி ஆல் இன் ஆல் அழகு ரோஜாவாய் இருக்கும் இதன் நன்மைகளையும், என்ன மாதிரியான நோய்களை குணப்படுத்தும் என்பதையும் பார்க்கலாம்.

Rose petal

நாட்டு ரோஜாக்களை (பனீர் ரோஜா) மட்டும் தான் சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் போது அவற்றை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் வளர்ந்த ரோஜாவில் நாம் ரசாயனங்கள் தெளிக்க மாட்டோம். இதுவே கடைகளில் வாங்கியதாக இருந்தால் சிறிது உப்பு தண்ணீரில் பத்து நிமிடம் வரை போட்டு வைத்து பின்பு நல்ல தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

காலையில் எழுந்ததும் பல துலக்கிலிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட வேண்டும். அதன்பிறகு, நன்கு சுத்தம் செய்த 15 - 20 ரோஜா இதழ்களை (ஒரு பூவின் இதழ்கள்) எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று அதன சாறு முழுவதும் உள்ளே போகும்படி சுவைத்து முழுமையாக சாப்பிட்டு விட வேண்டும். அதன் பிறகு சிறிது தண்ணீர் வேண்டுமானால் குடித்துக் கொள்ளலாம். இதை சாப்பிட்டு அரை மணி நேரம் வரை வேறு எந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் இதன் முழு பயனும் உங்களுக்கு கிடைக்கும்.

மூலநோய்க்கு அருமருந்து:

மூல நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு பலரும் பெரும் அவதியடைகிறார்கள். இந்த மூல நோய் உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. என்ன தான் மருந்து சாப்பிட்டாலும் ரத்த மூலம், உள்மூலம் ஆகியவற்றை சரிசெய்வது மிகக் கடினமான விஷயம். அறுவை சிகிச்சை தான் இறுதியில் தீர்வு என்று சொல்லப்படுகிற மூல நோயின் தாக்கத்தைக் கூட இந்த ரோஜா இதழ்களை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் குறைக்க முடியும். காலையில் சாப்பிடுவதை போல ஒரு டம்ளர் நீரில் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களைச் சேர்த்து மாலை வேளையில் குடித்து வர மூல நோய் குணமாகத் தொடங்கும்.

Piles

உடலை குளிர்ச்சியாக்கும்:

உடல் சூடு அதிகமாக இருப்பவர்களுக்கு வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் சரியான நிலையில் இருக்காது.. அதுமட்டுமின்றி சருமப் பிரச்சினை, தலைமுடி திர்தல் தொடங்கி அசிடிட்டி உள்ளிட்ட குடல் ஆரோக்கியத்தை பெரிதாக பாதிக்கும். அதனால் எப்போதும் உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ரோஜா இதழ்கள் உதவி செய்யும். அதனால் உடல் சூட்டைத் தணிக்க நினைப்வர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுங்கள்.

வயிற்றுப் போக்கிற்கு:

குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் என்ன சாப்பிட்டாலும் வயிறு வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். அவற்றை சரிசெய்து வயிற்றுப் போக்கை கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் ரோஜா இதழ்களுக்கு உண்டு. வயிற்றுப் போக்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறவர்கள் ரோஜா இதழ்களை வெந்நீரில். போட்டு கொதிக்க விட்டு அந்த நீரை டீ போல குடித்து வரலாம்.

Ovary

கர்ப்பப்பை வலுப் பெற:

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களுக்கு ரோஜா நல்ல மருந்தாகும். ரோஜா இதழ்களை சாப்பிடுவதால் உடல் இளமையாக இருக்கும். வாய் சுத்தமாகும்.

ரத்தம் சுத்தமாகும்:

ரோஜா மொட்டுகளில் ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து நன்றாக மைப் போல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும்.

From around the web