உங்க உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகிடுச்சா..? சீக்கிரமே குறைய இந்த உணவுகளை சாப்பிடுங்க!

 
Cholesterol

கொலஸ்ட்ரால் என்றதுமே பலரது நினைவில் வருவது, இது உடலில் தேவையில்லாத ஒன்று மற்றும் பல நோய்களை உண்டாக்கக்கூடியது என்பது தான். கொழுப்பு குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள், வெள்ளை மற்றும் மெழுகுப் போன்ற பொருள் தான் கொலஸ்ட்ரால். இது உடலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக இது உடலில் உள்ள செல்களுக்கான இன்றியமையாக ஒரு கட்டுமானப் பொருளாகும். மேலும் இது சாதாரண உடல் செயல்பாடுகளான பல முக்கிய ஹார்மோன்கள், பித்தம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு அவசியமானவை.

மனித உடலில் சேரும் கொழுப்பு என்பது ஒரு சைலன்ட் கில்லர் போல் செயல்பட்டு பல்வேறு உடல் உபாதைகளை சிறிது சிறிதாக ஏற்படுத்தி இறுதியில் நமது உயிருக்கே உலை வைத்து விடும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதில் மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ள ஒருபோதும் மறக்காதீர்கள். உங்கள் உணவு அட்டவணை மற்றும் வாழ்க்கைமுறையில் எப்போதும் கவனமாக இருங்கள். முக்கியமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

Oats - Nuts

கொலஸ்ட்ரால் அளவை எளிதில் குறைக்கும் சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகளை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கவும் இந்த உணவுகள் உதவுவதாகவும் ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா கூறுகிறார். உங்களுக்கு கொலஸ்ட்ரால் தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறதா? அப்படியென்றால் உங்கள் டயட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள் இவைதான்.

ஓட்ஸ்: 

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இதன் பீட்டா குளுக்கன் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை ஒழுங்குபடுத்துகிறது. ஓட்ஸ் மற்றும் ஓட்ஸ் தவிடை சாப்பிடுவதால் இரத்த கொலஸ்ட்ராலை அதிகரிக்காது. ஆகவே பழங்கள், நட்ஸ் மற்றும் பிற சத்தான உணவுகளுடன் சேர்த்து காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுங்கள்.

பீன்ஸ்: 

பீன்ஸ் மற்றும் பருப்புகளில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமென்றால் நார்ச்சத்து அதிகமுள்ள உணவை அதிகரிக்க மறக்காதீர்கள்.

Berries

பெர்ரி: 

ஆப்பிள் மற்றும் திராட்சை உள்ளிட்ட பெர்ரி பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்து, பெக்டின் மற்றும் அண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளன. இந்த பழங்களில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

ஒமேகா-3: 

சால்மன், கெளுத்தி, ட்ரவுட் போன்ற கடல் மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமுள்ளது. இது ட்ரைகிளிசரைடுகளை குறைக்க உதவுவதோடு நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. வாரத்தில் இரண்டு நாட்களாவது கடல் உணவுகளை சாப்பிடுங்கள். க்ரில் செய்தோ அல்லது பேக்கிங் அல்லது வேக வைத்தோ சாப்பிடுவது நல்லது.

Omega 3

அவகோடா: 

அவகோடா பழத்தில் நிறைவுறா கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

நட்ஸ்: 

பாதாம், வால்நட் பருப்புகள் போன்ற உணவுகளில் நிறைவுறா கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் தாவர ஸ்டெரால்கள் நிறைந்துள்ளன. இதன் விளைவாக, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

Olive Oil

ஆலிவ் எண்ணெய்: 

ஆலிவ் எண்ணெயில் நிறைவுறா கொழுப்புகள் மற்றும் பாலிஃபீனால் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இந்த மூலப்பொருள் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எப்போதும் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

சோயா உணவு: 

டோஃபு, சோயா பால் போன்ற பல சோயா உணவுகள் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகின்றன. உடலில் கொலஸ்ட்ரால் சமநிலையில் பிரச்சனை இருந்தால், இறைச்சியில் இருந்து கிடைக்கும் புரதங்களுக்குப் பதிலாக சோயாபீன்ஸ் போன்ற காய்கறி புரதங்களை உணவில் சேர்க்கவும்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

From around the web