உங்களுக்கு பொடுக்கு தொல்லை இருக்கா..? வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?

நமது வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுத் தேர்வுகள் மற்றும் நம் தலைமுடியைப் பராமரிக்காமல் இருக்கும் மனப்பான்மை ஆகியவை வறண்ட, உதிர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை ஏற்படுத்துகின்றன. இந்த பட்டியலில் மன அழுத்தம் மற்றும் தீங்கு விளைவிக்கும் சுற்றுச்சூழலை நாம் சேர்க்க மறந்துவிடுகிறோம். இவையும் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ள வாழைப்பழம், பல்வேறு ஊட்டச்சத்து கூறுகளைக் கொண்டுள்ளன. இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இவற்றைப் பயன்படுத்தி முடியின் நுனியில் பிளவு, முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை போன்ற பல வகையான முடி பிரச்சனைகள் நீக்க முடியும்.
தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற விலை உயர்ந்த முடி சிகிச்சைகளை நீங்கள் நாடியிருக்கலாம். ஆனால் நீங்கள் சிக்கனமான முறையில் முடியை பராமரிக்க விரும்பினால் வாழைப்பழத்தைப் பயன்படுத்துங்கள். வாழைப்பழத்தின் உதவியுடன் ஹேர் மாஸ்க் செய்து அதை தடவவும்.
நீங்கள் வாழைப்பழ ஹேர் மாஸ்க் செய்யும் போது சரியான வாழைப்பழத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். பழுத்த வாழைப்பழங்கள் மென்மையாகவும், ஹேர் பேக் உருவாக்கப் பயன்படுத்தும்போது இது பேஸ்டாக செய்ய எளிதாக இருக்கும். பச்சை வாழைப்பழம் சரியாக மசிக்கப்படவில்லை என்றால் அதிலிருந்து ஹேர் மாஸ்க் தயாரிக்க கடினமாக இருக்கும்.
முடிக்கு ஏற்ப ஹேர் மாஸ்க்
வாழைப்பழத்தைப் பயன்படுத்துவது முடிக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் ஹேர் மாஸ்கிலிருந்து அதிகபட்ச முடி பலனைப் பெற விரும்பினால் உங்கள் முடி வகைக்கு ஏற்ப ஹேர் மாஸ்க் தயார் செய்ய வேண்டும். உதாரணமாக உங்கள் தலைமுடி பலவீனமாகவோ அல்லது வறண்டதாகவோ இருந்தால் வாழைப்பழத்துடன் தேன் கலக்கவும். அதேபோல் முடி உதிர்வை போக்க வாழைப்பழத்துடன் முட்டையை கலந்து உபயோகிப்பது நல்லது.
நன்றாக பிசைந்து கொள்ளவும்
வாழைப்பழத்தை மாஸ்க் செய்யும் போது வாழைப்பழத்தை நன்றாக மசிப்பது மிகவும் முக்கியம். வாழைப்பழ ஹேர் மாஸ்க் உருவாக்கும்போது சிறிய கட்டிகள் அதில் இருக்கும். இதற்குப் பிறகு அதை முடியில் தடவும்போது கட்டியை எடுத்து விட வேண்டும். பின் அதை நன்றாக கலக்க முயற்சிக்கவும் இதனால் பேஸ்ட் மென்மையாகவும், கட்டிகளற்றதாகவும் இருக்கும்.
சுத்தமான முடி மீது தடவவும்
வாழைப்பழ மாஸ்க் போடும் போதெல்லாம், முதலில் முடியை சுத்தம் செய்யுங்கள். மேலும் ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் தலைமுடி சிதைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது முடியில் ஹேர் மாஸ்க் போடுவதை மிகவும் எளிதாக்குகிறது.
நேரத்தைக் கண்காணிக்கவும்
வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை தலைமுடிக்கு தடவிய பின் போதுமான நேரம் அப்படியே விட்டுவிடுவது அவசியம். உதாரணமாக ஒரு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்திய பிறகு, அதை 20 முதல் 30 நிமிடங்கள் விட்டு விடுங்கள். நீங்கள் இதை முடியில் குறைவாகவோ அல்லது அதிக நேரம் வைத்திருந்தால் மாஸ்க்கின் பலன் உங்களுக்குக் கிடைக்காது.