வேர்க்கடலையை இப்படி செய்து சாப்பிட்டா? இவ்வளவு நன்மை கிடைக்குமா?

பொதுவாக நட்ஸ்கள் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவுப் பொருட்களாகும். நட்ஸ்களில் பல வகைகள் உள்ளன. அதில் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு நட்ஸ் தான் வேர்க்கடலை. இந்த வேர்க்கடலையை இதுவரை நாம் வேக வைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடுவோம். இருப்பினும், வேர்க்கடலையில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற நினைத்தால், அதற்கு அவற்றை ஆவியில் வேக வைத்து சாப்பிட வேண்டும்.
அதுவும் இப்படி வேக வைத்த வேர்க்கடலையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள பல உறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படும். வேக வைத்த வேர்க்கடலையில் புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் பல்வேறு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
இதய ஆரோக்கியம்:
வேக வைத்து வேர்க்கடலையை சாப்பிடும் போது, அதில் உள்ள மோனாஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் போன்ற இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புக்கள் கிடைக்கும். இந்த கொழுப்புக்களை ஒருவர் மிதமான அளவில் எடுத்து வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தையும் குறைக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்:
வேர்க்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ரெஸ்வெராட்ரால் வளமான அளவில் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ப்ரீ ராடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
எடை இழப்புக்கு உதவும்:
பலரும் வேர்க்கடலை உடல் பருமனை அதிகரிக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம், அதுவும் மிதமான அளவில் உட்கொள்வதன் மூலம் பசியுணர்வு குறைவதோடு, அதில் உள்ள புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்களால் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும். எனவே டயட்டில் இருப்போருக்கு இது ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்.
இரத்த சர்க்கரை சீராகும்:
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இது இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடச் செய்து, இரத்த சர்க்கரையை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் அல்லது சர்க்கரை நோயின் அபாயத்தில் இருப்பவர்களுக்கு வேக வைத்த வேர்க்கடலை ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.
மூளைக்கு நல்லது:
வேர்க்கடலையில் ஃபோலேட் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதவையாகும். அதுவும் இச்சத்துக்களானது அறிவாற்றல் செயல்பாட்டிலும், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)