எக்காரணம் கொண்டும் இந்த பழங்களை தோல் நீக்கி சாப்பிடாதீங்க.. ஏன் தெரியுமா?

 
Fruits

தோல்கள் என்றாலே அவை தேவையற்றவை என்று நாம் மனதில் பதிந்து போனதன் விளைவாக நம்மில் பலர் பழங்களை உண்ணும்போது அவற்றில் உள்ள மேல் தோலை அகற்றிவிட்டு உண்பதை பழக்கமாக்கி கொண்டுள்ளோம். ஆனால் நாம் ஏன் அனைத்து பழங்களிலும் தோலை உரிக்கிறோம்? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவற்றை நீங்கள் மேல் தோலோடு உண்பதே நன்மை பயக்கும். அப்படியான சில பழங்களை இப்போது பார்க்கலாம். 

ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழங்களில் தோல்கள் உண்ண தகுந்தவை அல்ல என்பதால் அவற்றில் தோலை உரிக்கிறோம். பேரிக்காய் போன்ற பழங்களில் தோல்கள் கசக்கும் தன்மையைப் பெற்றுள்ளதால் அவற்றின் தோல்களை நீக்கிவிட்டு உண்கிறோம். மேலும் சில காரணங்களுக்காக சில பழங்களில் தோலை நீக்க வேண்டி உள்ளது. ஆனால் சில பழங்களில் கசப்பு தன்மை இருந்தாலும் கூட அவை தோலில் அதிக சத்துக்களை கொண்டுள்ளன.

Plums

பிளம்ஸ்:

பிளம்ஸ் என்பது பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு ஊட்டச்சத்து பழமாகும். இது அடர் ஊதா நிறத்தில் இருக்கும் குளிர்கால பழமாகும். இந்த பழத்தை உண்ணும்போது பலரும் இதன் தோல்களை நீக்கிவிட்டு உண்கின்றனர். ஆனால் இந்த பழத்தின் தோல்கள் பால்பினால்களால் நிரம்பியுள்ளது, இந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்ட கலவைகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.

இது தோலின் கருமை நிறத்தை சரி செய்ய உதவுகின்றன. மேலும் பிளம்ஸில் நார்ச்சத்துகள் நிறைந்து காணப்படுவதால் இவை மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. எனவே குளிர் பருவகாலங்களில் செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற பழமாக பிளம்ஸ் இருக்கும். முக்கியமாக பிளம்ஸ் பழத்தைத் தோல் உரிக்காமல் சாப்பிடவும்.

பேரிக்காய்:

அதிகமான நபர்கள் பேரிக்காயை உண்ணும் முன்பு அதன் தோலை உரிக்கின்றனர். ஏனெனில் பேரிக்காய் தோலானது கசப்பு சுவையைக் கொண்டது. எனவே யாரும் அதன் தோலை விரும்புவதில்லை. ஆனால் பேரிக்காயின் தோலில் அதிகமான அளவில் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து குடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை சரி செய்கிறது, இதனால் குடல் ஆரோக்கியம் அதிகமாவதற்கு இது உதவுகிறது. இனி பேரிக்காயைத் தோலுடன் சாப்பிட முயற்சிக்கவும்.

Pears

ஆப்பிள்:

பெரும்பாலும் பலர் ஆப்பிளின் தோலை நீக்குவதில்லை என்றாலும் சிலர் ஆப்பிள் தோலை நீக்கிவிட்டு பிறகு அதை உண்கின்றனர். ஆனால் ஆப்பிளின் தோலில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது திசுக்களில் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் ட்ரைடர்பெனாய்டு என்ற கலவையானது ஆப்பிள் தோலில் உள்ளது.

சப்போட்டா:

சப்போட்டா பழத்தின் தோலில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. மேலும் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சப்போட்டா உதவுகிறது. எனவே சப்போட்டாவை நன்கு கழுவிய பிறகு அப்படியே சாப்பிடலாம். அதன் தோல்களை நீக்க வேண்டிய அவசியமில்லை.

Sapota

மாம்பழம்:

மாம்பழத்தின் தோலில் கொழுப்பை எரிக்க உதவும் செல்கள் உள்ளன, மேலும் மாம்பழத்தின் தோலில் கரோட்டினாய்டுகள், பாலிபினால்கள், ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய்களை எதிர்த்து போராடுவதற்கு உதவுகின்றன. மாம்பழத்தின் தோலை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம். இதை வைத்து ஊறுகாய் தயாரிப்பது மூலம் இதன் சதை மற்றும் தோல் இரண்டையுமே எளிதாக உண்ண முடியும். எனவே இனி மாம்பழத்தை உண்ணும்போது அதை தோலுடன் உண்ண பழகிக் கொள்ளவும். 

கிவி:

கிவி பழத்தை கூட தோல் நீக்காமல் சாப்பிடுவது நல்லது எனக் கூறப்படுகிறது. ஆனால் கிவி பழத்தை தோலுடன் உண்ணலாம் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். இந்த பழத்தின் தோலில் நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே இந்த தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் கிவி பழத்தை தோலுடன் உண்ண முயற்சிக்கலாம்.

எனவே இந்த பழங்கள் யாவும் தோலில் அதிக சத்துக்களை கொண்டுள்ளதால் இவற்றை தோலுடன் உண்பது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

From around the web