முருங்கை இலையின் இந்த அற்புத நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க!

 
Moringa Leaves

முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், ரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது.

முருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது. இந்த முருங்கை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது பல நாட்டுமருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Leaves

அழற்சியை எதிர்த்து போராடும்: 

புற்றுநோய், மூட்டுவலி, முடக்கு வாதம் மற்றும் பல தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற கொடிய நோய்களுக்கு அழற்சி மூல காரணமாகும். ஐசோதியோசயனேட்ஸ் (isothiocyanates) இருப்பதால் முருங்கை இலைகள் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டவையாக இருக்கின்றன.

கொலஸ்ட்ராலை குறைக்கும்: 

முருங்கை மரத்தின் இலைகள் ஹை கொலஸ்ட்ராலுக்கு எதிரான நம்பகமான தீர்வை தரும். ஏற்ற இறக்கமான கொலஸ்ட்ரால் அளவுகள் சிக்கலான இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ஆனால் முருங்கை இலைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அதிக கொலஸ்ட்ரால் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

Cholesterol

கல்லீரலைப் பாதுகாக்கும்: 

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முருங்கை இலைகள் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் முருங்கை இலைகள் காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் எதிர்மறை விளைவுகளை குறைக்கின்றன. இது மட்டுமின்றி, முருங்கை இலைகள் கல்லீரல் செல்களை சரிசெய்து, கல்லீரலை ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்து (oxidative damage) பாதுகாக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்: 

ஐசோதியோசயனேட்ஸ் அழற்சியை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும் உதகிறது. முருங்கை இலைகளில் உள்ள குர்செட்டின் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

Diabetes

அல்சைமர் பிரச்சனை:

முருங்கை இலைகள் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் ஆன்டி-ஆக்சிடென்ட் நியூரோவை மேம்படுத்தி, அதன் ஆக்டிவிட்டிகளுக்கு ஊக்கமளிக்கிறது. அல்சைமர் பிரச்சனை உள்ளவர்களுக்கு முருங்கை இலைகள் நல்ல தீர்வளிக்க வல்லது.

From around the web