உடல் எடையை குறைக்க எதுவும் செய்ய முடிவதில்லையா.. தொப்பையை குறைக்க சுபலமான டிப்ஸ் இதோ!

 
weight loss

கொலஸ்ட்ரால் என்றதுமே பலரது நினைவில் வருவது, இது உடலில் தேவையில்லாத ஒன்று மற்றும் பல நோய்களை உண்டாக்கக்கூடியது என்பது தான். கொழுப்பு குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள், வெள்ளை மற்றும் மெழுகுப் போன்ற பொருள் தான் கொலஸ்ட்ரால். இது உடலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக இது உடலில் உள்ள செல்களுக்கான இன்றியமையாக ஒரு கட்டுமானப் பொருளாகும். மேலும் இது சாதாரண உடல் செயல்பாடுகளான பல முக்கிய ஹார்மோன்கள், பித்தம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு அவசியமானவை.

மனித உடலில் சேரும் கொழுப்பு என்பது ஒரு சைலன்ட் கில்லர் போல் செயல்பட்டு பல்வேறு உடல் உபாதைகளை சிறிது சிறிதாக ஏற்படுத்தி இறுதியில் நமது உயிருக்கே உலை வைத்து விடும். உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் பல வித உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனாலும், அனைவருக்கும் இவற்றால் தேவையான பலன்கள் கிடைப்பதில்லை. 

Weight loss

எடை இழப்புக்கான (Weight Loss) வழி ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். இதில் ஒருவரது வாழ்க்கை முறை, உணவு முறை, நாள் முழுதும் அவர் செய்யும் பணிகள், அவருக்கு கிடைக்கும் ஓய்வு நேரம், உறக்கம் என பலவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். எனினும், சில அடிப்படை விஷயங்கள் அனைவருக்கும் ஒன்றாக இருக்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் உடல் பருமன் வேகமாக அதிகரித்து வருகிறது. பிஸியான வாழ்க்கை காரணமாக பலரால் உடல் எடையை குறைக்க எதுவும் செய்ய முடிவதில்லை. எனினும், சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலமும், சில பழக்கவழக்கங்களின் மூலமும் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படிப்பட்ட சில இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

புரதச்சத்து அதிகம் உள்ள உணவு:

நமது வழக்கமான உணவில் 25-30 சதவிகிதம் புரதம் (Protein) இருக்க வேண்டும். புரதச்சத்து பசியைக் கட்டுப்படுத்துகிறது. பசி கட்டுக்குள் இருந்தால் உடல் எடையை குறைப்பதில் உதவி கிடைக்கும். நாம் தினசரி உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறைந்தால் உடல் எடை அதிகரிக்கும். நீடித்த எடை இழப்புக்கு அதிக புரத உணவுகள் சிறந்தவை. புரதம் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை விட அதிக தெர்மோஜெனிக் விளைவைக் கொண்டுள்ளது. ஜீரணிக்க அதிக கலோரிகள் தேவைப்படுகிறது. புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் குறைவான கலோரி அளவைக் கொண்டுள்ளன. ஆகையால் புரதத்தை உட்கொள்வது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

Protein

போதுமான அளவு தண்ணீர்:

தண்ணீர் (Water) குடிப்பது உடலில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். இது பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான நீர் கிடைத்தால்,  உடல் அதன் செயல்பாடுகளை சரியாகச் செய்கிறது. எடை இழப்பில் தண்ணீர் மிகவும் முக்கியமான பங்கை அளிக்கின்றது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நீரழிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. நீரிழப்பு தலைவலி, சோர்வு, சோம்பல், குழப்பம், மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். இது பசியையும் அதிகரிக்கும்.

சமச்சீர் உணவு:

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பீன்ஸ், கொட்டைகள், விதைகள் மற்றும் ஆரோக்கியமான அசைவ உணவுகளின் சரியான கலவை சமச்சீர் உணவாக (Balanced Diet) பார்க்கப்படுகின்றது. சமச்சீர் உணவு எடை இழப்புக்கு உதவி, எடை அதிகரிப்பதை தடுப்பதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. சமச்சீர் உணவு நம் உடலுக்கு நிரம்பிய உணர்வை அளித்து, போதுமான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. 

Balanced Diet

குறைந்த அளவு கார்போஹைட்ரேட்: 

எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளை (Low Carbohydrate) உணவில் சேர்க்க வேண்டும். இதை குறைப்பது எடையைக் குறைக்க உதவுகிறது. குறைந்த கார்ப் உணவு, உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்கும். குறிப்பாக தொப்பை கொழுப்பை குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமின்றி , கார்போஹைட்ரேட் அளவை குறைப்பது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. 

நல்ல உறக்கம்:

நல்ல தூக்கம் (Sleep) உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஏனெனில் தூக்கமின்மை உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. தினமும் இரவில் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நன்றாக உறங்குவது மிக அவசியமாகும். 

Sleep

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

From around the web