பெண்களுக்கு உண்டாகும் மூளை பக்கவாதம்.. அறிகுறிகள் என்னென்ன?

 
Headache

மூளையில் இருக்கும் இரத்த குழாய்கள் அடைபடும் போது அல்லது அவை வெடிக்கும் போது, மூளை பக்கவாதம் (Brain Stroke) ஏற்படுகிறது. மூளை பக்கவாதம் ஏற்பட்டால், மூளையில் நீண்ட கால மோசமான பாதிப்பு ஏற்படும், நீண்ட கால இயலாமை ஏற்படும். சில சமயங்களில் இறப்புகூட ஏற்படலாம். மூளை பக்கவாதம், உலகின் மூன்றாவது பொிய உயிா் கொல்லி நோய் ஆகும்.

ஒரு சில நோய்கள் ஆண்களை மட்டும் தான் பாதிக்கும் என்ற நிலை மாறி பெண்களுக்கு கூட பலவிதமான நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் சமீப காலமாக இதய நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டுமே முந்தைய ஆண்டைவிட பிரைன் ஸ்ட்ரோக் என்று கூறப்படும் மூளை செயலிழப்பு மற்றும் பக்கவாதத்தால் இரண்டு மடங்கு பெண்கள் இறந்து போகிறார்கள். எனவே இந்த நிலை பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். பெண்களுக்கு ஏற்படும் பக்கவாதத்தை ஒருசில அறிகுறிகளை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Brain Stroke

காரணமில்லாத பலவீனம் அல்லது மரத்துப் போகும் தன்மை: 

பெண்களுக்கு திடீரென்று உடலின் ஏதோ ஒரு பக்கத்தில் காரணமில்லாமல் பலவீனமாக உணர்ந்தாலோ அல்லது, கை, கால்கள், முகம் என்று உடலின் ஒரு பாகத்தில் மரத்து போனது போல உணர்ந்தாலோ உடனடியாக கவனிக்க வேண்டும். மேலும், கைகளை தூக்க முடியாமல் போனாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பேசுவதில் அல்லது புரிந்து கொள்வதில் சிக்கல்: 

திடீரென்று, பேசுவதில் அல்லது மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டால், அது மூளை ஸ்ட்ரோக்கின் அறிகுறியாக இருக்கலாம். குழறிய பேச்சு அல்லது கோர்வையின்மை ஆகியவையும் இதில் அடங்கும்.

தீவிரமான தலைவலி: 

திடீரென்று தாங்க முடியாத அளவுக்கு தலைவலி ஏற்படுவது, பக்கவாதத்தின் அறிகுறிகளில் ஒன்று. தலைவலிக்கு பல காரணங்கள் இருந்தாலும், தீவிரமாக இருக்கும் போதும், இங்கே குறிப்பிட்டிருக்கும் வேறு சில அறிகுறிகள் இருந்தாலும் பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

Brain Stroke

பார்வைக் கோளாறு: 

மங்கலான பார்வை, இரட்டை பார்வை, திடீரென்று பார்வை குறைவது, ஒரு கண்ணில் அல்லது இரண்டு கண்களிலும் முழுமையாக பார்வை இழப்பு ஆகிய அனைத்துமே பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

தலை சுற்றல் மற்றும் பேலன்ஸ் இழப்பது: 

பக்கவாதம் ஏற்படும் முன்பு உடலில் ரத்த ஓட்டம் குறையும், தடைபடும். எனவே, இயல்பாக வேலைகளை செய்ய முடியாது. தலை சுற்றல், திடீரென்று சாதாரணமாக செயல்படுவதில் தடுமாற்றம், பேலன்ஸ் இழப்பது போன்றவை ஏற்படும்.

Brain Stroke

நடப்பதில் சிரமம்: 

எந்தவொரு சின்ன வேலையை செய்தால் கூட, உடலின் பல்வேறு உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும். ஆனால், அந்த கோ-ஆர்டினேஷன் குறைந்து, நடப்பதில் சிரமம் ஏற்படும், நடக்கும் போது பேலன்ஸ் தவறி கீழே விழப் போகும் நிலை ஏற்படும். இது பக்கவாதத்தின் அறிகுறியாகும்.

குழப்பமான மனநிலை: 

பேசுவது, வேலை செய்வது முதல் நினைப்பது வரை தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியாது.

From around the web