உடல் எடைய குறைக்க நீங்க முயற்சி பண்ணுறீங்களா? உங்களுக்கான கலோரி குறைவான 5 உணவுகள் இங்கே!

 
Diet

எடை இழப்பு என்று வரும்போது, உணவு மற்றும் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களுக்கு முற்றிலும் பற்றாக்குறையாக இருக்கும். பின்னர் நீங்கள் ஒரு ஆடம்பரமான உணவுப் போக்கைக் காண்பீர்கள், விரைவான எடை இழப்பை உறுதிப்படுத்துவீர்கள். இந்த உணவுப் போக்குகளில் பெரும்பாலானவை செயல்படாது என்பதே அடிப்படை உண்மை. அவை கட்டுப்படுத்தக்கூடியவை மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நீங்கள் இழக்கக்கூடும். இது நீண்ட கால சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் முக்கியமான விஷயம் போதுமான ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்ளும் அதே நேரம் கலோரி நுகர்வு அளவாக இருக்க வேண்டும். பொதுவாக தென்னிந்திய உணவுகள் ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன. தென்னிந்திய உணவுகள் என்று சொன்னாலே பெரும்பாலும் நம் நினைவிற்கு வருவது தோசை, இட்லி, வடை, சாம்பார், உப்புமா உள்ளிட்டவை தான் நம் நினைவுக்கு வரும். நம் வீடுகளிலும் தினசரி அடிப்படையில் இந்த உணவுகள் செய்யப்படுகின்றன.

Weight loss

ஆனால் எடைக்குறைப்பு முயற்சியில் இருந்தாலும் கூட ஒருவர் கிரிஸ்ப்பியான, காரமான மற்றும் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகளை ருசித்து சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் இப்படி சாப்பிட ஆசைப்படுவது எடை குறைப்பு முயற்சிக்கு இடையூறு செய்வதோடு, எடையை அதிகரிக்கவும் செய்யும். கலோரி குறைவான, அதே சமயம் ருசியான உணவு அல்லது ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிட வேண்டுமா?

அடை: 

பலரது வீட்டில் அடை என்பது எப்போதாவது தான் செய்யப்படும் ஒரு டிஷ்ஷாக இருக்கிறது. மொறுமொறுப்பான மற்றும் காரமான அடையை காலை மற்றும் இரவு நேரத்து உணவாக மட்டுமில்லாமல் மாலை வேளைகளில் ஆரோக்கியமான ஸ்னாக்ஸாகவும் கூட சாப்பிடலாம். துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட ஆரோக்கியமான பருப்பு வகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் அடையானது சத்தான, அதிக புரதச்சத்து கொண்ட ஒரு சிறந்த தென்னிந்திய உணவாக இருக்கிறது.

புட்டு: 

தென்னிந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக நம் தமிழகம் மற்றும் கேரளாவில் பலரும் விரும்பி சாப்பிட கூடிய அற்புதமான ஒரு காலை உணவாக இருக்கிறது புட்டு. அரிசி மாவையும், தேங்காய் துருவலையும் கலந்து வேக வைத்து செய்யப்படும் ஆரோக்கியமான உணவாக இருக்கும் புட்டு எடையை குறைக்க நினைப்போருக்கு ஏற்ற உணவாக இருக்கிறது. புட்டுக்கு கூடுதல் சுவை சேர்க்க சிலர் கொண்டைக்கடலை கறியை சைடிஷ்ஷாக சேர்த்து சாப்பிடுவார்கள்.

Puttu

ராகி தோசை: 

வழக்கமான தோசைக்கு பதிலாக ராகி மாவை கலந்து செய்யப்படும் தோசை எடையை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சரியான உணவாக அமைகிறது. ராகி தோசையை மிகவும் எளிமையாக வீட்டிலேயே செய்து விடலாம். ராகி தோசையை தயாரிக்க ராகி மாவு, தயிர், தண்ணீர், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் கொத்தமல்லி உள்ளிட்ட பல சத்து நிறைந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன். இந்த தோசைக்கு தேங்காய் சட்னியை தொட்டு கொள்ளலாம்.

சுறுமுரி (Churumuri): 

பேல்பூரியின் சவுத் இந்தியன் வெர்ஷன் தான் இந்த சுறுமுரி. இது பொரி, வெங்காயம், கேரட், தக்காளி போன்ற சில பச்சை காய்கறிகள், ஆரோக்கியம் தரும் மசாலா பொருட்கள், சட்னிகள், முக்கியமாக ஓமப்பொடி உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படும் அருமையான சுவை கொண்ட ஸ்னாக்ஸ் ஆகும். நீங்கள் குறைந்த கலோரி கொண்ட ஸ்னாக்ஸை தேடுகிறீர்களானால், இது நிச்சயமாக ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

churumuri

சோயா இட்லி: 

தென்னிந்திய உணவுகளை பற்றி பேசும் போது நிச்சயம் இட்லியை தவிர்க்க முடியாது. வழக்கமான இட்லி சாம்பார் அல்லது சட்னியை சாப்பிடுவதை விட குறைந்த கலோரி சோயா இட்லி ஆரோக்கியமானவை மற்றும் வெயிட்லாஸ் முயற்சிக்கு ஏற்றவை. இந்த சோயா இட்லிக்கு சட்னியை தொட்டு கொண்டு சாப்பிடலாம்.

From around the web