அதிகமா டென்ஷன் ஆகுறீங்களா..? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..!
பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாள்பட்ட நோயால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது. உயர் ரத்த அழுத்த நிலையானது இதய நோய், பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒரு தீவிரமான சுகாதார நிலையாகும் . எனினும் ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் BP அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை தடுத்து சீராக வைத்து கொள்ளலாம்.
தினசரி ஆரோக்கியமான உணவுகள் அடங்கிய சீரான டயட்டை பின்பற்றுவதன் மூலமும், வழக்கமான அடிப்படையில் வார்த்தைபெரும்பாலான் நாட்கள் உடற்பயிற்சி செய்வவதன் மூலமும், அன்றாட நடைமுறைகளில் நல்ல மாற்றங்களை செய்வதன் மூலமும் உயர் ரத்த அழுத்த நிலை ஏற்படும் அபாயத்தை கணிசமாக குறைக்கலாம். நம்முடைய வாழ்க்கைத் தரம் மற்றும் பொது நல்வாழ்வை மேம்படுத்தி உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க உதவும் சில முக்கியமான ஆரோக்கிய வாழ்க்கை முறை பழக்கங்களை இங்கே பார்க்கலாம்.
ஆரோக்கியமான டயட்:
உங்களது தினசரி உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோட்டீன் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதே நேரம் சோடியம், சேச்சுரேட்டட் ஃபேட்ஸ் மற்றும் ப்ராசஸிங்கின் போது சர்க்கரை சேர்க்கப்பட் உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தினசரி ஒர்கவுட்:
வாரந்தோறும் குறைந்தது 150 நிமிடங்கள் மாடிரேட்-இன்டன்சிட்டி ஏரோபிக் ஆக்டிவிட்டி அல்லது 75 நிமிட தீவிர ஆக்டிவிட்டிஸ்களுடன், வாரத்திற்கு 2 முறையாவது தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான எடை:
உயரத்திற்கு ஏற்ப இல்லாமல் கூடுதல் எடையுடன் இருப்பது அல்லது பருமனாக இருப்பது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே எப்போதும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதை நோக்கமாக கொள்ளுங்கள்.
அளவாக மது அருந்துங்கள்:
உங்களிடம் மது பழக்கம் இருந்தால் எப்போதும் மிதமான அளவில் அதனை பருகும் பழக்கத்தை பராமரிப்பது நல்லது. பெண்கள் ஒரு நாளைக்கு 1 ட்ரிங், ஆண்கள் ஒரு நாளைக்கு 2 ட்ரிங்ஸ்களையும் அருந்தலாம்.
புகைப்பழக்கத்தை தவிர்ப்பது:
புகைப்பழக்கமானது நம்முடைய ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. சிகரெட்டில் உள்ள நிகோடின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்க செய்கிறது.
மனஅழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்:
பிரபல இருதயவியல் ஆலோசகர் டாக்டர் பிரவின் கஹலே கூறுகையில், மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் ஆழ்ந்த சுவாசம், தியானம் அல்லது யோகா போன்ற மனம் மற்றும் உடலை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளில் தினசரி ஈடுபடலாம் என்கிறார்.
வழக்கமான அடிப்படையிலான சோதனைகள்:
குறிப்பிட்ட சீரான இடைவெளியில் உங்கள் வீட்டிலேயோ அல்லது மருத்துவ நிபுணரிடம் சென்றோ உங்கள் ரத்த அழுத்த அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதும், சூழலுக்கு ஏற்ப அவர் வழங்கும் பரிந்துரைகளை பின்பற்றுவதும் நன்மைகளை அளிக்கும்.
காஃபின் நுகர்வில் கவனம்:
பொதுவாக மிதமான அளவிலான காஃபின் நுகர்வு பாதுகாப்பானது. அதே நேரம் அதிகப்படியான காஃபின் நுகர்வு ஒருவரின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கவும்:
எப்போதாவது ஒருநாள் என்றால் பரவாயில்லை, ஆனால் அடிக்கடி ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகளை உண்பது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட பங்களிக்கும். ஏனென்றால் அவை பெரும்பாலும் அவற்றில் அதிக அளவு சோடியம் சேர்க்கப்பட்டிருக்கும்.
போதுமான அளவு தூக்கம்:
தினசரி இரவு 7-9 மணிநேரம் நிம்மதியாக தூங்க வேண்டும். இதற்கும் குறைவான நேரம் தூங்கும் பழக்கம் நம் உடலின் ரத்த அழுத்த அளவுகளை எளிதில் பாதிக்கும். மேற்கண்ட பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக குறைக்கலாம்.