பிஸ்கட் பிரியரா நீங்க.. முதலில் இத படிச்சு பாருங்க... ஷாக் ஆயிடுவீங்க..!

 
Biscuits

பொதுவாக பசி எடுக்கும் போது அவசர காலத்தில் அந்த பசியை அடக்க நிறைய பேர் பிஸ்கட் சாப்பிடுவது வழக்கம். சொல்லப்போனால் பலருக்கு காலையில் காபி, டீ குடிக்கும் போது பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலர் எங்கு சென்றாலும் தங்கள் பையில் ஒரு பாக்கெட் பிஸ்கட்டை வைத்திருப்பார்கள்.

பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலக டிராயரில் எப்போதும் பிஸ்கட்டை ஸ்டாக் வைத்திருப்பார்கள். அந்த அளவில் பிஸ்கட் பெரும்பாலானோரின் விருப்பமான ஸ்நாக்ஸ் என்றே கூறலாம். ஆனால் இப்படி சாப்பிடும் பிஸ்கட் ஆரோக்கியமானதா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இல்லையென்றால், உண்மையில் அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதுக்குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அமிதா காத்ரே தனது இன்ஸ்டாகிராமில் பின்வருமாறு கூறியுள்ளார். அது என்னவெனில், பிஸ்கட்டில் ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை என்பதால் இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் அல்ல. இதில் கொழுப்புக்கள் மற்றும் சுத்திரிக்கப்பட்ட மாவு மட்டுமே உள்ளன மற்றும் நார்ச்சத்து எதுவும் இதில் இல்லை. எந்த ஒரு பிஸ்கட்டுமே வெற்று கலோரிகளையே கொண்டுள்ளன. அதாவது, இதை உட்கொள்வதால் கலோரிகள் மட்டும் கிடைக்குமே தவிர, புரோட்டீன், வைட்டமின்கள் அல்லது கனிமச்சத்துக்கள் என்று எதுவுமே கிடைக்காது.

Biscuits

“கடைகளில் சுகர்-ப்ரீ, ஜீரோ கொழுப்பு, நோ மைதா அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கான பிஸ்கட்டுகள் விற்கப்படுவதைக் காணலாம். எவ்வளவு வெரைட்டி பிஸ்கட்டுகள் இருந்தாலும், அவற்றில் வெற்று கலோரிகள் மட்டுமே உள்ளன. இப்படிப்பட்ட பிஸ்கட்டுக்களை பசி நேரத்தில் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

கூடுதலாக, பிஸ்கட்டுகள் பெரும்பாலும்சுத்திரிக்கப்பட்ட கோதுமை மாவு அல்லது மைதாவால் ஆனது மற்றும் இவற்றில் நார்ச்சத்துக்கள் ஏதும் இல்லை. நார்ச்சத்து இல்லாத உணவுகளை அதிகம் எடுத்தால் அதன் விளைவாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். மேலும் பிஸ்கட்டுகளில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், உடலில் அதிக ட்ரைகிளிசரைடு மற்றும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு பங்களிக்கின்றன. இப்படி பிஸ்கட்டுகள் குறித்து கூறப்பட்டவை அனைத்தும் ரஸ்க்குகளுக்கும் பொருந்தும். அனைத்துமே ஒரே மாதிரியானவை தான்” என்று கூறியுள்ளார்.

A post shared by Amita Gadre | Nutritionist (@amitagadre)

ஊட்டச்சத்து நிபுணர் அமிதா காத்ரேவின் கூற்றுப்படி, டீயுடன் எதையும் சாப்பிடக்கூடாது. அப்படியே பசி எடுத்தால், மக்கானா, வெஜிடேபிள் ரோல் அல்லது பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். அதுவும் காபி, டீ குடித்தும் பசி எடுத்தால், 15 நிமிடம் கழித்து எதையும் சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் டீயில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்பு சத்துக்கள், உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதை பாதித்துவிடும் என்றும் கூறினார்.

பிஸ்ட்டை தினமும் தான் சாப்பிடக்கூடாது. எப்போதாவது உங்களுக்கு பிடித்த பிஸ்கட்டை சாப்பிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் அமிதா காத்ரே கூறியுள்ளார். அதே சமயம் இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

From around the web