தங்கம் விலை உயர்வுக்கு இவங்களும் காரணமா?

 
Gold Gold

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதல் உலக நாடுகளை பலவகைகளிலும் அச்சுறுத்தும் வகையிலான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வரி விதிப்பு மூலம் உலகச் சந்தையையே ஒரு உலுப்பு உலுப்பியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

இதன் எதிரொலி உலக பங்குச் சந்தைகளில் தெரிகிறது. அமெரிக்கப் பங்குச் சந்தையும் பெரும் வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தையின் வீழ்ச்சி முதலீட்டார்களை வேறு முதலீடுகள் நோக்கி திருப்பியது. அமெரிக்காவின் டாலர் மதிப்பும் சரியத் தொடங்கியது. தங்கத்தின் பக்கம் முதலீட்டார்களின் கவனம் சென்றதால் அதன் விலை கிடுகிடு என உயர்ந்தது.

அக்‌ஷ்யதிரியை என்று நம் இந்திய மக்களும் அவர்கள் பங்குக்கு வாங்கிக் குவிக்கின்றனர். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்துள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலும் 25 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியும் போட்டியில் குதித்தால் தங்கத்தின் விலை விண்ணை முட்டாதா என்ன?

From around the web