கோடை வெயிலுக்கு இதமாக குளு குளு பாதாம் பிசின்.. இதில் இத்தனை நன்மைகளா..!

 
Badam Pisin

கோடை காலத்தில் வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.  கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுவதால், நீங்கள் வழக்கமாக தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றை அருந்துவீர்கள். இது உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டால், டாக்டர் ஸ்ரீ வித்யா பிரசாந்த், உங்களுக்கான ஆரோக்கியமான மாற்று வழியை கூறியுள்ளார்.

பாதாம் பிசின் அல்லது பாதாம் கம் உடல் உஷ்ண பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப் புண்களைப் போக்க உதவுகிறது என்றும், தோல் மற்றும் முடி , உடல் பலவீனம் மற்றும் எடை மேலாண்மைக்கு சிறந்தது என்றும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், உடல் சூட்டைத் தடுக்க பாதம் பிசின் மிகச் சிறந்த வீட்டு வைத்தியமாகும். பழச்சாறுகள், பால் அல்லது எந்த இனிப்பு வகையிலும் பாதாம் பிசினை சேர்த்து அருந்தலாம் என்றும் டாக்டர் ஸ்ரீ வித்யா பிரசாந்த் கூறியுள்ளார்.

Badam Pisin

பாதம் பிசினால் ஏற்படும் நன்மைகள்:

  • பாதம் பிசின் அல்சர், அமிலத்தன்மை, வீக்கம், வயிற்றில் எரிதல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • பாதம் பிசின் குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே இது உடல் சூட்டைக் குறைக்க வீட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • தேவையான கார்போஹைட்ரேட்டுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எனவே, பாதாம் பிசின் பாலுடன் உட்கொள்ளும்போது எடை அதிகரிக்க உதவுகிறது.
  • பாதாம் பிசின் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு, எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. பாதாம் பிசினை வழக்கமாக பயன்படுத்தி வந்தால், கொழுப்பைக் கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள இரத்த அளவை பராமரிக்கிறது.
  • பாதம் பிசின் முன்கூட்டி முதுமை என்று சொல்லப்படும் ப்ரீமெச்சூர் ஏஜிங் காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாக்கிறது. மேலும், இது தோல் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுவதோடு, தோல் அழற்சி, தடிப்புகள், பருக்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இது மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் பல நோய்களுக்கு எதிராக இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • கர்ப்பிணிப் பெண்கள் பாதம் பிசினை உட்கொண்டால், கருப்பையில் உள்ள கரு வளர்ச்சியடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் இது உடலையும், எலும்புகளையும் வலுப்படுத்துகிறது.

ஜிண்டால் நேச்சர்க்யூர் இன்ஸ்டிடியூட் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் வினோதா குமாரி கூறியதாவது, பாதாம் பிசினின் குளிர்ச்சியான தன்மையால், கோடை மாதங்களில் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. குளிர்ச்சியான பால், ரோஸ் பால் அல்லது தேங்காய் பால் ஆகியவற்றுடன் இணைந்தால், புண்கள் மற்றும் வயிற்றில் எரிச்சல் உண்டாக்குவதை குறைக்க உதவுகிறது.

Badam Pisin

கூடுதலாக, பாதாம் பிசின் உணவு நார்ச்சத்து நிறைந்தது மற்றும் புரதங்கள், கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, கோடையில் பாதாம் பிசினை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது வெப்பத்தைத் தணிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவி புரிகிறது.

From around the web