தினம் ஒரு ஸ்பூன் நெய்... உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

 
Ghee

உலகின் மிகவும் ஆரோக்கியமான சமையல் பொருட்களில் ஒன்று நெய். நெய் எந்தவொரு உணவின் சுவையையும் பலமடங்கு அதிகரிக்கக்கூடும். உங்களின் குழம்பு அல்லது ரொட்டிகள் அனைத்தின் மீதும் ஒரு துளி நெய் சேர்ப்பது அதன் சுவையை மாற்றிவிடும். நெய் மிகவும் ஆரோக்கியமானது என்றாலும், உடல் எடை கூடும் என்ற பயத்தில் மக்கள் பலரும் தங்களைத் தாங்களே நெய்யிடமிருந்து விலக்கிக் கொள்கிறார்கள். நெய் உணவுகளை சுவையாக மாற்றும் முக்கியப் பொருள் என்பதை மறுப்பதற்கில்லை.

இது உணவில் முதன்மையான மூலப்பொருளாக இருக்கும் போது பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. நெய் என்பது பாலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வெண்ணெய். நீங்கள் தினமும் நெய் சாப்பிட்டால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Ghee

மூக்கடைப்பில் இருந்து நிவாரணம்:

ஆயுர்வேதத்தை பொருத்தவரை, நெய் சாப்பிடுவது நமது உடலை கதகதப்பாக்குவதற்கு உதவுகிறது. இதன் காரணமாக இது சளி மற்றும் மூக்கடைப்பிற்கு அற்புதமான ஒரு சிகிச்சையாக அமைகிறது. மூக்கடைப்பு இருக்கும் சமயத்தில் மூக்கின் மீது சிறிதளவு நெய்யை தடவுவது தொற்றிலிருந்து விரைவாக நிவாரணம் பெறுவதற்கு உதவும்.

ஆர்த்ரைடிஸ் வலியிலிருந்து நிவாரணம்:

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு நெய் பெரிய அளவில் கைக்கொடுக்கிறது. நெய்யில் நிறைந்திருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை குறைத்து திசுக்கள் மற்றும் மூட்டுகளில் லூப்ரிகன்ட் போல செயல்பட்டு வலியை குறைக்கிறது.

Arthritis

வீக்கத்தை குறைக்கிறது:

நெய்யில் காணப்படும் பியூட்ரிக் அமிலம் வீக்க எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதன் காரணமாக இது வீக்கம் மற்றும் காயங்களை ஆற்றுவதற்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

நெய்யில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இது நெய்யை ஆரோக்கியமான உணவாக மாற்றுகிறது. ஆகவே தினமும் நெய் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்பெறும்.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் வெதுவெதுப்பான நீருடன் இணைந்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல், வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது. அதுமட்டுமல்லாமல் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை சிறந்த முறையில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

Immunity

நெய்யில் இருக்கக்கூடிய மிகச் சில பலன்களை பற்றி மட்டுமே நாம் பேசியுள்ளோம். இது தவிர நெய் உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான சருமம், தலைமுடி, கண்கள் மற்றும் பல நன்மைகளையும் தருகிறது. எனினும் நெய்யை மிதமான அளவில் சாப்பிட்டால் மட்டுமே அதில் இருக்கக்கூடிய பலன்களை நம்மால் பெற முடியும். அதிகப்படியான நெய் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு. “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியை நினைவில் வைத்துக் கொண்டு எந்த ஒரு உணவையும் மிதமான அளவில் சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது போதுமான அளவாக கருதப்படுகிறது.

From around the web