நீங்கள் தினமும் பிளம்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 ஆரோக்கிய நன்மைகள்.!
ப்ளம்ஸ் என்பது பார்ப்பதற்கு அழகான மற்றும் சுவை மிகுந்த ஒரு கனி. இந்த பிளம்ஸ் பழம் சுவையாக இருப்பதோடு நமக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடியது. எனவே இந்த ப்ளம்ஸ் பழத்தை எங்கு கிடைத்தாலும் தாராளமாக வாங்கி சாப்பிடலாம். அந்த அளவிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இதில் கொட்டி கிடக்கின்றன. பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள் முதல் சரும ஆரோக்கியம் வரை மேம்படும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இந்த பிளம்ஸ் பழத்தில் விட்டமின் பி1, விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் பி2, பி3, பி6 மற்றும் விட்டமின் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது. பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் உங்க உடல் எடையை பராமரிக்க முடியும், மேலும் நீரிழிவு மற்றும் இதய நோயை எதிர்த்து போராட உதவுகிறது. இது கொழுப்பை குறைக்கிறது. மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பார்வைத்திறனை மேம்படுத்தவும், சரியான செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
எடை குறைப்புக்கு உதவுகிறது:
பிளம்ஸில் காணப்படும் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் பிளம்ஸை சேர்த்துக்கொள்ளலாம்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது:
உங்கள் மூளை ஆரோக்கியமாக இருக்கவும், மன அழுத்தத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் உணவில் பிளம்ஸை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கண் பார்வையை மேம்படுத்துகிறது:
வைட்டமின் கே மற்றும் பி6 பிளம்ஸில் ஏராளமாக உள்ளது. வைட்டமின்கள் உங்கள் கண் பார்வை மற்றும் தோலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. உங்கள் உணவில் பிளம்ஸை சேர்த்துக் கொள்வதன் மூலம் கண் பார்வையை மேம்படுத்தலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
அயன், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் பிளம்ஸில் காணப்படுகின்றன, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி ஆனது பல வகையான பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
இரத்த உறைவை தடுக்கிறது:
இது இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது, மேலும், இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் ஆபத்துக்களை குறைக்கிறது. இதனுடன், அல்சைமர் நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
எலும்பை பலப்படுத்துகிறது:
பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க பிளம்ஸ் மிகவும் உதவியாக இருக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகு பெண்கள் பிளம்ஸை சாப்பிட்டு வந்தால், அவர்கள் தங்களை ஆஸ்டியோபோரோசிஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)