தேங்காயின் 5 ஆரோக்கிய நன்மைகள்.. தெரிந்தால் தினமும் சாப்பிடுவீங்க!

 
Coconut

பழங்காலம் முதலாக நம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் தேங்காய். இந்த தேங்காயானது சமையலில் மட்டுமின்றி, பல்வேறு வடிவங்களில் பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காயில் ஏராளமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இதனால் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.

முக்கியமாக தேங்காயில் காப்பர், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, செலினியம், ஜிங்க் போன்றவை அதிகமாக உள்ளன. மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. அதோடு ஃபோலேட், வைட்டமின் சி, தையமின் போன்றவைகளும் உள்ளன. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய தேங்காயை தினமும் ஒருவர் ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளின் அபாயத்தைத் தடுக்கலாம். நம் முன்னோர்களின் வலுவான கட்டுடலுக்கும், நோயின்றி நீண்ட நாள் வாழ்ந்தமைக்கும் தேங்காயும் ஒரு காரணம் என்றே கூறலாம். இப்போது தினமும் ஒரு துண்டு தேங்காயை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

Coconut

செரிமான ஆரோக்கியம் மேம்படும்

தேங்காய் தினமும் சாப்பிடுவதால், வயிற்று உப்புசம், மலச்சிக்கள் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணம் நார்ச்சத்துள்ள உணவுகளை குறைவாக உண்பது தான். ஆனால் தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இதை உட்கொள்ளும் போது குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படும் அபாயம் குறையும். நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திப்பவராயின், ஒரு துண்டு தேங்காயை தினமும் சாப்பிடுங்கள், செரிமான பிரச்சனைகளை நிச்சயம் தடுக்கலாம்.

உடலை குளிர்விக்கும்

மென்மையான தேங்காய் இறைச்சி உங்கள் உடலுக்கு குளிர்ச்சியான விளைவைக் கொண்டிருப்பதால் கோடையில் சாப்பிடுவது சிறந்தது. இது ஆற்றலை மீட்டெடுக்கிறது, மறுசீரமைப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் விளைவை வழங்குகிறது.

Cool

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

தேங்காயில் ஆன்டி-பாக்டீரயல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. எனவே தேங்காயை உட்கொள்ளும் போது, அது உடலை பாக்டிரியாக்கள், பூஞ்சைகளின் தாக்குதலைத் தடுத்து, உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. நீங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை எளிய முறையில் வலிமையாக்க விரும்பினால், தேங்காய் துண்டுகளை தினமும் சாப்பிடுங்கள் போதும்.

வாய் ஆரோக்கியம்

இது நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் வாயிலிருந்து பாக்டீரியா தொற்றுக்களைத் தடுக்கிறது மற்றும் உங்கள் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது துவாரங்களைத் தடுக்கவும் உங்கள் ஈறுகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.

Oral

கனிமங்களால் நிரம்பியது

மென்மையான தேங்காயில் மாங்கனீசு, தாமிரம், செலினியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற பல்வேறு கனிமங்கள் உள்ளன. அவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் பராமரிக்க உதவுகிறது. இது பொதுவான தகவல், இதை ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களின் கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

From around the web