உடம்பில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் 5 உணவுகள்.. ஒருபோதும் இந்த உணவுகளை தவிர்க்காதீங்க..!

 
Blood

உடலில் இரத்தம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருந்தால் தான், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதோடு, ஊட்டச்சத்துக்களும் கிடைத்து, உடல் உறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். என்ன தான் இரத்தம் உடலில் இயற்கையாக சுத்திகரிக்கப் பட்டாலும், நாம் உண்ணும் சில உணவுகளால் அசுத்தமாகத் தான் செய்கிறது. இதனைத் தவிர்க்க இரத்தத்தை சுத்தம் செய்யும் செயல்களை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உடலில் இருக்கும் இரத்தத்தை ஒருசில உணவுப் பொருட்கள் சுத்தம் செய்யும். இப்படி இரத்தத்தை சுத்தம் செய்யும் செயல்முறையின் போது நோயெதிர்ப்பு மண்டலமும் மேம்பட்டு, சரும ஆரோக்கியமும் ஊக்குவிக்கப்படும்.

ஐதராபாத்தில் உள்ள பஞ்சார் ஹில்ஸ் கேர் மருத்துவமனையின் மருத்துவ உணவியல் நிபுணரான ஜி சுஷ்மா, இரத்த சுத்திகரிப்புக்கு உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய ஐந்து ஆற்றல்மிக்க உணவுகளை பற்றி பகிர்ந்து கொள்கிறார். இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய இந்த சூப்பர்ஃபுட்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியமாகும்.

Blood

கீரைகளின் நன்மைகள்: 

கீரை, முட்டைக்கோஸ் மற்றும் சுவிஸ் சார்ட் ஆகியவை இரும்புச்சத்து நிறைந்த உணவுகளாகும். இரத்த சிவப்பணு உற்பத்திக்கு இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது என்று சுஷ்மா கூறியுள்ளார். கீரைகளில் வைட்டமின் கே உள்ளதால் வலுவான எலும்புகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு ஒரு பொதுவான காரணமாகும், இதை சமாளிக்க அதிக இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். இந்த ஊட்டச்சத்து இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஹீமோகுளோபின் என்ற ப்ரோட்டீனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, மேலும், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.

Iron

பெர்ரிகளின் நன்மைகள்: 

ப்ளூபெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் ஆகிய பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இந்த பெர்ரிகளில் இயர்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் நிரம்பியுள்ளது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் உங்கள் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன என்றும் சுஷ்மா கூறியுள்ளார். இந்த பெர்ரிகளில் வைட்டமின் சி நிரம்பியுள்ளதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன மற்றும் இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன.

Raspberry

மீன்கள்: 

சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன் ஆகியவை இதய ஆரோக்கியம் நிறைந்த மீன்களாகும். ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள் நிறைந்த இந்த மீன்களானது, வீக்கம், ட்ரைகிளிசரைடுகள் (தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள்) மற்றும் இதய நோய் அபாயம் ஆகியவற்றை குறைக்கின்றன.

Fish

நட்ஸ் மற்றும் விதைகள்: 

பாதாம், சியா விதைகள் மற்றும் ஆளிவிதைகள் ஆகியவற்றில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஹெல்தி ஃபாட்ஸ், ஃபைபர் மற்றும் ப்ரோட்டீன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன, இவை அனைத்தும் ஃபாட்ஸ் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

Nuts

பீட்ரூட்: 

பீட்ரூட் ஆனது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பீட்ரூட், இரும்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்களின் கலவையானது, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அதிகரிப்பதை மேம்படுத்துவதற்கும் சுத்திகரிப்பதற்கும் உதவுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்வதற்கு பீட்ரூட் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். மேலும், கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்யும்.

Beetroot

From around the web