அவகோடா பழத்தின் 5 நன்மைகள்.. இது தெரிஞ்சா நீங்களே டெய்லி சாப்பிடுவீங்க!

 
Avocado

சத்தான மற்றும் பல நன்மைகள் நிறைந்த அவோகேடா பல இந்திய வீடுகளின் சமையலறையில் பிரதானமாக மாறிவிட்டன. இதனை பழம் என்று சிலர் நினைக்கும் போது, பலர் இது ஒரு காய்கறி என்று நம்புகிறார்கள். இது மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது, தற்போது இந்தியர்களிடையே அவோகேடா பழத்தின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது.

வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் இது, அதன் சுவை மட்டுமின்றி பல நன்மைகளுக்காக பிரபலமாக உள்ளது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, இவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கோடை காலத்தில் உங்களை புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் இந்த அவகோடா பழத்தில் கிடைக்கும் 5 முக்கியமான பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

Avocado

நீர்ச்சத்து:

அவகோடா பழத்தில் 73 சதவிகிதம் தண்ணீர் தான் நிரம்பியுள்ளது. கோடை காலத்தில் இயல்பாகவே உடலில் நீரிழப்பு அதிகமாக இருக்கும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால் கட்டாயம் அவகோடா பழத்தை சாப்பிட வேண்டும். நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் திரவ பானங்களில் முக்கிய பங்கை வகிக்கிறது அவகோடா.

எலக்ட்ரோலைட் சமநிலை:

அவகோடா பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் உடலின் எகட்ரோலைட் சமநிலையை பராமரிக்க இது பெரிதும் உதவுகிறது. அதிகமான வெப்பநிலையில் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்க பொட்டாசியம் அவசியமாகும். பொதுவாக வாழைப்பழத்தில் தான் அதிக பொட்டாசியம் இருக்கும் எனக் கூறப்படுவதுண்டு. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் வாழைப்பழத்தில் இருப்பதை விட அவகோடாவில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது.

Avocado

ஆரோக்கிய கொழுப்புகள்:

அவகோடா பழத்தில் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நமக்கு வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இந்த நிறைவுறா கொழுப்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும் இந்த கொழுப்புகள் கரையக்கூடிய கொழுப்பு வைட்டமினை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. இதன் மூலம் கோடை காலத்தில் நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

ஆற்றல் அதிகரிப்பு:

அவகோடா பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, கார்போஹைடரேட்ஸ் ஆகியவை சமநிலையில் உள்ளதால் நம் உடலுக்கு நீடித்த ஆற்றலைத் தருகிறது. இதன் காரணமாக கொதிக்கும் வெயிலில் கூட நம்மால் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க முடிகிறது.

Skin care

சரும பாதுகாப்பு:

அவகோடா பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் தீங்கு நிறைந்த புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் நமக்கு ஆரோக்கியமான சருமத்தை தருவதோடு வீக்கத்தை குறைத்து கோடை வெயிலுக்கு எதிராக பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

From around the web