மின்சாரம் தாக்கி பேனரை பிடித்தபடியே பலியான இளைஞர்கள்.. சிலை திறப்பு விழாவில் அதிர்ச்சி சம்பவம்!

 
Andhra

ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்காக பிளக்ஸ் பேனர் பொருத்திய போது மின்சாரம் தாக்கி 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உண்டராஜவரம் மண்டலம் தடிப்பூர் கிராமத்தில் சிலை திறப்பு விழாவுக்காக பிளக்ஸ் பேனர் பொருத்திய போது மின்சாரம் தாக்கி நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். முன்னதாக பாப்பண்ணா கவுடு சிலை திறப்பு விழாவுக்கு பிளக்ஸ் பேனர் பொருத்திய போது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. 

shock

பிளக்ஸ் பேனரில் இருந்த இரும்பு கம்பி மின்சார ஒயரில் உரசியதால் 4 இளைஞர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே 4 இளைஞர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் , 4 இளைஞர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Andhra

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், காயமடைந்த நபருக்கு முறையான சிகிச்சையை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இதனிடையே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. 

From around the web