மருத்துவமனைக்குள் இளம்பெண் கொலை.. கொலை செய்த இளைஞர் பகீர் வாக்குமூலம்

கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கைதானவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள துறைவூர் பகுதியைச் சேர்ந்தவர் லிஜி ராஜேஷ் (40). இவரது தாயார் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் அங்கமாலி அருகே மூக்கனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தனது தாயை அவர் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு இளைஞர் வந்தார்.
அவர் லிஜியிடம் திடீரென வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இந்த வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர் லிஜியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த லிஜி சரிந்து விழுந்தார். உடனே அங்கிருந்த செவிலியர்களும் மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளிக்க அழைத்து சென்றனர்.
ஆனால் அவர் அதற்குள் இறந்துவிட்டார். இந்த சம்பவம் நடக்கும் போது அங்கிருந்த மக்களும், மருத்துவமனை ஊழியர்களும் சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து வைத்திருந்து அங்கமாலி காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். விசாரணையில் அவர் பெயர் மகேஷ் (42) என்றும் அவர் அலுவா என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து வெளியான விசாரணையில் மகேஷும் லிஜியும் காதலித்து வந்ததாகவும் இவர்களின் காதலுக்கு லிஜியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மகேஷுடன் பேசுவதை நிறுத்திய லிஜி, வீட்டில் பார்த்த வேறு ஒரு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்த திருமணத்திற்கு முன்பே மகேஷ் லிஜியுடன் பேச முயற்சித்தும் அவர் பேச மறுத்துவிட்டார். அது போல் திருமணத்திற்கு பிறகும் லிஜியை சந்தித்து தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு மகேஷ் கூறியதாக தெரிகிறது.
மருத்துவனையிலும் இது தொடர்பான வாக்குவாதத்தின் போதுதான் லிஜியை மகேஷ் கத்தியால் குத்த முயன்ற போது, தப்பியோடியதால் துரத்தி சென்று 12 முறை குத்தியதாக விசாரணையில் தெரிகிறது. இந்த தகவல்களை தவிர மற்ற தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.