நீர்வீழ்ச்சியில் குதித்த தற்கொலை முயன்ற இளம்பெண்.. பெற்றோர் திட்டியதால் விபரீத முடிவு! பகீர் வீடியோ

 
Chhattisgarh

சத்தீஸ்கரில் இளம்பெண் ஒருவர் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சித்திரக்கோட் நீர்வீழ்ச்சியில் இளம்பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) மாலை குதித்து தற்கொலை முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்தச் பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Chhattisgarh

நீர்வீழ்ச்சியை அடைந்தவுடன் எந்த வித இலக்குமின்றி கால் போன போக்கில் நடந்த அந்த சிறுமி விரைவிலேயே நீர்வீழ்ச்சியின் முனைக்கு சென்று விட்டாள். அங்கு சுற்றியுள்ளவர்கள் அச்சிறுமியின் இந்த செயலைப் பார்த்து அவளை குதிக்க வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சியும், எவருடைய பேச்சையும் கேட்காமல் நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கு இருக்கும் ஒருவர் வீடியோ பதிவு செய்து அதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஆபத்தான நீர்விழ்ச்சியில் குதித்த அந்தப் பெண், காப்பாற்றப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் தனது பெற்றோர் திட்டியதாகவும், அதன் காரணமாக மனமுடைந்து நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


போலீசார் விசாரணையில் அந்தப் பெண் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். சிகிச்சைக்கு பின்னர் போலீசார் இளம்பெண்ணே பொற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web