கர்நாடகாவில் இளம் விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை.. போலீஸ் விசாரணை!

 
Karnataka

கர்நாடகாவில் இளம் விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா ஆர்யபு கிராமத்தைச் சேர்ந்தவர் பாரத் (24). இவர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

Suicide

இந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்திருந்த பாரத் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த புத்தூர் போலீசார், பாரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது, கடந்த 2 மாதங்களாக டிஆர்டிஓ அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்த பாரத், கடந்த வாரம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு வந்துள்ளார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Police

நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரி போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதன்பிறகு மன உளைச்சலில் இருந்த பாரத், அன்று இரவில் தன் அறையில் தூக்கு போட்டு இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web