காதலியை மடியில் உட்கார வைத்து பைக் ஓட்டிய வாலிபர்.. வைரலான வீடியோவால் காதலன் கைது!

 
Karnataka

கர்நாடகாவில் பைக்கில் இளம்பெண், தனது காதலனின் தொடை மீது ஏறி அமர்ந்து கட்டியணைத்தப்படி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலைய சாலையில் விபத்துகளை தடுக்க வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலமாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில், விமான நிலைய ரோட்டில் உள்ள எலகங்கா மேம்பாலத்தில் கடந்த 17-ம் தேதி ஒரு வாலிபர் தன்னுடைய காதலியை மடியில் அமர வைத்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றிருந்தார். 

Karnataka

அதாவது பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த இளம்பெண், தனது காதலனின் தொடை மீது ஏறி அமர்ந்து கட்டியணைத்தப்படி இருந்தார். இதனை வாலிபருக்கு பின்னால் வந்த ஒரு வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இதுகுறித்து எலகங்கா போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் வந்தது. அந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஹெல்மெட் அணியாமலும், விதிமுறைகளை மதிக்காமலும் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தது தெரியவந்தது. 


இதையடுத்து எலகங்கா போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சாம்புரா எம்.வி. லே-அவுட்டை சேர்ந்த சிலம்பரசன் (21) என்பதும், வாடகை கார் டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சில்ம்பரசனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web