அருவியில் தவறி விழுந்த இளைஞர்.. கதறும் பெற்றோர்.. அதிர்ச்சி வீடியோ!

 
Karnataka

கர்நாடகாவில் உள்ள அரிசினங்குடி அருவியில் வீடியோ பதிவு செய்யும்போது 23 வயது இளைஞர் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.

கர்நாடக மாநிலம் கொல்லூர் அருகே உள்ள அரசினகுண்டி அருவியை காண சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த சிலர் இளைஞர்கள் வந்தனர். அவர்களில் 23 வயதான இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக ஒரு பாறையின் மீது நின்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி விழுந்து சௌபர்ணிகா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

swim

காணாமல் போன நபரைத் தேடும் பணியை மீட்புக் குழுக்கள் உடனடியாகத் தொடங்கியதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன, ஆனால் தற்போது வரை, அவரை பற்றிய தகவல் வரவில்லை. கொல்லூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர், மேலும் அதிர்ச்சியடைந்த இளைஞனின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து, அதிசயம் நடக்கும் என்று நம்பியுள்ளனர்.

சௌபர்ணிகா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர், பத்ராவதி தாலுக்காவைச் சேர்ந்த முனிசாமி என்பவரது மகன் சரத் (23) என்பது தெரியவந்தது. சரத்தின் தந்தை அளித்த புகாரில், பத்ராவதியில் இருந்து அரசினகுண்டி அருவிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் காரில் வந்துள்ளார். பிற்பகல் 3.30 மணியளவில் அருவி அருகே உள்ள பாறையில் நின்று கொண்டிருந்த அவர், எதிர்பாராதவிதமாக தவறி அருவியில் விழுந்து சௌபர்ணிகா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.


சரத்தின் நண்பர்கள், சரத்தை ஒரு கல்லின் மேல் நின்று வீடியோ பதிவு செய்து கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவர் போஸ் கொடுத்து, பின்னர் கல்லில் இருந்து நீர்வீழ்ச்சிக்குள் நழுவுவது போன்ற வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

From around the web