நீ ஒரு பாதி நான் மறு பாதி! நாடாளுமன்றத்தில் சம்பவம் செய்த ராகுல் காந்தி!!

 
INDIA MPs

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா அணி எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று நாடாளுமன்ற நுழை வாயில் ஆர்ப்பாட்டம் செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்க்கள் கைகளில் பிரதமர் மோடியும் தொழிலதிபர் அதானியும் ஒரே உருவத்தில் இருப்பதைப் போன்ற பதாகைகளை கையில் ஏந்தி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினார்கள்.

இது குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழியும் எக்ஸ் தளத்தில் படங்களுடன்பதிவிட்டுள்ளார்.

 

ஒருபாதி முகம் மோடி மற்றொரு பாதி முகம் அதானி என்ற வகையில் அந்தப் படங்கள் இருந்தன.
ஒவ்வொரு நாளும் நாடாளுமன்ற வாசலில் நின்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வருவது வாடிக்கையாகி விட்டது.

இதற்குத் தீர்வு தான் என்ன என்ற கேள்வியும் எழுகிறது

From around the web