தோழியுடன் தூங்கிய பெண் கழுத்து நெரித்துக் கொலை.. போலீஸ் பிடியில் கணவன்.. கர்நாடகாவில் பயங்கரம்!

 
Karnataka

கர்நாடகாவில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 25 வயதான நவ்யஸ்ரீ என்பவர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு எஸ்எம்வி லேஅவுட்டில் உள்ள கெங்கேரியில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இடையே சில மாதங்களாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

Dead Body

அதன்படி கடந்த செவ்வாய்கிழமை அன்று நவ்யஸ்ரீ, தனது தோழியான ஐஸ்வர்யாவை போனில் தொடர்பு கொண்டு திருமண வாழ்க்கை குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளார். இதனால் நவ்யஸ்ரீயை சந்தித்து பேசுவதற்காக ஐஸ்வர்யா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஐஸ்வர்யா, மற்றொரு நண்பரான அனில் என்பவருடன் சேர்ந்து நவ்யஸ்ரீ, பிரச்சனையான திருமண வாழ்க்கை குறித்து விவாதித்துள்ளார். அதில் நவ்யஸ்ரீ அவரது கணவர் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். 

இதையடுத்து மூவரும் இரவு உணவு அருந்தி விட்டு அனில் புறப்பட்டு சென்றதும், ஐஸ்வர்யா, நவ்யஸ்ரீ வீட்டிலேயே தங்கியுள்ளார். மறுநாள் காலை ஐஸ்வர்யா எழுந்து பார்த்தபோது நவ்யஸ்ரீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து போலீசாருக்கு தகவல் அளித்த ஐஸ்வர்யா நடந்த விவரங்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Police

நவ்யஸ்ரீ மீது சந்தேகம் கொண்ட கிரண், இரவு நேரத்தில் சாவியை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்து கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web