நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் அத்துமீறல்.. அதிகாலையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

 
karnataka karnataka

கர்நாடகாவில் அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோணங்குண்டே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (ஆக. 2) அதிகாலையில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் பெண் ஒருவர் தனியாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை திடீரென பின்பக்கத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரிகமாக நடக்க முயற்சித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மணி ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், பெங்களூரில் வசித்து வரும் அவர், தன்னுடன் சேர்ந்து நடைப்பயிற்சியில் ஈடுபடும் தனது தோழிக்காக காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Police

இந்த காட்சி, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதில் அந்த நபரிடமிருந்து தப்பித்த பெண் சாலையில் வேகமாக ஓட்டமெடுக்க, அவரை பின்தொடர்ந்து துரத்திச் சென்று அவரை பின்பக்கத்திலிருந்து கட்டியணைக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் தப்பியோடிய காட்சிகளும் கண்காணிப்புப் கேமராக்களில் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


கண்காணிப்புப் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

From around the web