17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி பெண் பலி.. சாகச மோகத்தால் நிகழ்ந்த விபரீதம்.. அதிர்ச்சி வீடியோ! 

 
Uttar Pradesh

உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார் மோதியதில், ஸ்கூட்டரில் இருந்த தாயும் மகளும் தூக்கி வீசப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் கித்வாய் நகர் பகுதியில் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்துள்ளார்.  பின்புறம் அவருடைய மகள் அமர்ந்து இருந்துள்ளார். அவர்கள் சென்ற திசைக்கு எதிரே இருந்து, பக்கவாட்டில் சறுக்கியபடி திடீரென வந்த கார் ஒன்று ஸ்கூட்டரின் மீது மோதியுள்ளது.

Uttar Pradesh

இந்த சம்பவத்தில், தாயும் மகளும் தூக்கி வீசப்பட்டனர். இருவரையும் அந்த வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதில், அந்த பெண் உயிரிழந்து விட்டார். படுகாயமடைந்த மகள் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


அந்த காரை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது. பரபரப்பான அந்த சாலையில் சாகசம் செய்வதற்காக காரை ஓட்டியபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் விபத்து ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுவனை போலீசார் காவலுக்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web