அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதி பெண் பலி.. சிக்குவரா ஆளும்கட்சியின் முக்கிய புள்ளியின் மகன்?

 
Worli Worli

மகாராஷ்டிராவில் அதிவேகமாகச் சென்ற பிஎம்டபிள்யூ சொகுசு கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஒர்லி நகரில் கொலிவாடா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் நகவா.  இவரது மனைவி காவேரி நகவா.  வழக்கம்போல் இன்று காலை இவர்கள் இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் மீன் வாங்க சென்றனர். அவற்றை பின்னர் விற்பது வழக்கம்.  இந்நிலையில், அவர்கள் மீன் வாங்கி கொண்டு திரும்பி வரும்போது, பின்னால் வந்த பிஎம்டபிள்யூ ரக கார் ஒன்று இவர்களுடைய ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.  

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.  பிரதீப் தரையில் விழுந்த நிலையில், காவேரி காரில் 100 மீட்டர் தொலைவு வரை இழுத்து செல்லப்பட்டு உள்ளார். அவர் பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், காரை குடிபோதையில் ஓட்டி சென்றது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் துணை தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா (24) என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Worli

சம்பவம் நடந்ததும் அவர் தப்பியோடி விட்டார்.  இதுகுறித்து ராஜேஷ் ஷா மற்றும் அவருடைய கார் ஓட்டுநர் ராஜ்ஸ்ரீ பிஜாவத் ஆகியோரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

லேசான காயங்களுடன் தப்பிய பிரதீப் சம்பவம் பற்றி கூறும்போது, அதிகாலை 5.30 மணியளவில் விபத்து நடந்தது. பின்னால் வந்த கார் ஒன்று ஸ்கூட்டரின் மீது மோதியது என கூறினார். இதில், அவர் இடதுபுறம் விழுந்தபோதும் அவருடைய மனைவி சாலையில் இழுத்து செல்லப்பட்டு உள்ளார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Worli

இந்த சம்பவத்தில், தொடர்புடைய நபர்கள் பெரிய இடத்து மனிதர்கள். யாரும் எதுவும் செய்ய முடியாது என்று பிரதீப் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, மிஹிர் ஷாவின் பெயரில் வாகனம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சம்பவத்தின்போது, மிஹிர் ஷா மற்றும் அவர்களுடைய ஓட்டுநர் காரில் இருந்தனர். நேற்றிரவு ஜுகுவில் உள்ள பார் ஒன்றில் மிஹிர் ஷா மதுபானம் குடித்து இருக்கிறார். அவர் வீடு திரும்பும்போது, ஓட்டுநரிடம் நீண்ட தொலைவுக்கு காரை ஓட்டி செல்லும்படி கூறியுள்ளார்.

கார் ஒர்லிக்கு வந்ததும், காரை ஓட்டுகிறேன் என மிஹிர் கூறியுள்ளார். அதன்பின்னர் காரை அதிவிரைவாக ஓட்டி சென்ற மிஹிர் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என கூறியுள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சட்டம் அதன் கடமையை செய்யும்.  சட்டத்தின் முன் அனைவரும் சமம்.  போலீசாரிடம் பேசியுள்ளேன்.  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

From around the web