லிவ்-இன் பார்ட்னரின் அந்தரங்க உறுப்பை தாக்கிய பெண்.. மனைவிக்கு பணம் அனுப்பியதால் விபரீதம்!

 
Andhra Andhra

ஆந்திராவில் மனைவிக்கு பணம் அனுப்பிய லிவ்-இன் பார்ட்னரின் அந்தரங்க உறுப்பை பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தொரகுடிப்படு கிராமத்தில் வசித்து வருபவர் விஜய்குமார் யாதவ். விவசாயியான இவர், அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். விஜய்குமாருக்கு திருமணமாகிவிட்டது. இவரது மனைவி, குழந்தைகள் எல்லாம் சொந்த ஊரில் இருக்கிறார்கள். பிழைப்பு தேடி ஆந்திராவுக்கு வந்தவர், அங்கேயே தங்கியிருந்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இவருடன் சீதா குமாரி என்ற பெண்ணும் வசித்து வந்தார். சீதா குமாரிக்கு திருமணமாகவில்லை. இருவருமே பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், ஒரே வீட்டில் லிவிங் டூ கெதராக இருவருமே வாழ்ந்து வந்தனர். சமீபத்தில்தான் இவர்களுக்கு பழக்கமாகியிருக்கிறது. எனவே, கடந்த 4 மாதங்களாகவே லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

secret

இதனிடையே விஜய்குமார் சொந்த ஊரிலுள்ள தன்னுடைய குடும்பத்துக்கு, மாத மாதம் பணம் அனுப்பி வந்துள்ளார். இது சீதா குமாரிக்கு பிடிக்கவில்லை. மனைவிக்கு பணம் தருவது சீதாகுமாரிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜய்குமாரிடம் பல முறை வாக்குவாதமும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு விஜய்குமார் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது சீதா குமாரி அவரது கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, அவரது அந்தரங்க உறுப்பில் கடுமையாக தாக்கியுள்ளார். பிறகு விஜய்குமாரின் மொபைல் போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால், செல்லும் வழியில், வீட்டின் உரிமையாளரை சந்தித்து, விஜய்குமார் தாக்கப்பட்ட தகவலையும் சொல்லிவிட்டு, போயிருக்கிறார்.

Police

இதைக்கேட்டு பதறிப்போன வீட்டு உரிமையாளர் விரைந்து வந்து, கட்டிலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜய்குமாரை மீட்டு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். விஜய்குமாருக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. சீதா குமாரி எங்கே போனார்? அவர் யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web