பிரதமர் மோடிக்கு அழைப்பு வருமா?வராதா?
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஜனவரி 20ம் தேதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகின்றனர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று பல்வேறு உலகத் தலைவர்களும், தொழிலதிபர்களும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவின் பிரதமர் என்ற வகையில் பிரதமர் மோடியும் பங்கேற்க விருப்பமாக உள்ளதாகவும் விழாவில் பங்கேற்பதற்காக முறையான அழைப்பிதழைப் பெற்றுவிடவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் முகாமிட்டுருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். என்னுடைய பிரச்சாரத்தில் மோடி பங்கேற்பார் என்று நம்பிக்கையுடன் ட்ரம்ப் தெரிவித்து இருந்த போதிலும் இந்த தடவை ட்ரம்ப்க்கு ஆதரவாக பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை, ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் இல்லை. எதிர்த்துப் போட்டியிட்டவர் இந்திய வம்சாவளியைச் சார்ந்த கமலா ஹாரிஸ் என்பதால், மோடிக்கு தெரிவிக்கும் ஆதரவு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பும் என்பதாலேயே அமைதி காத்தார் என்று நம்பப்படுகிறது.
ஆனால் ட்ரம்ப் இதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுவதாக கூறப்படுகிறது. அதிகளவிலான இந்திய வம்சாவளியினரை தனது புதிய அரசில் நியமித்துள்ளார் ட்ரம்ப். இந்தியாவுடன் நட்பு விரும்பவே அமெரிக்காவும் விரும்புவதாகவும் தெரிகிறது. ஆனாலும் தனிப்பட்ட அதிருப்தி காரணமாக மோடியை தவிர்க்கிறாரா ட்ரம்ப் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடைசி நேரத்தில் அழைப்பிதழ் வந்தால் பிரதமர் மோடி செல்லக்கூடாது என்று விமர்சகரகள் கருத்து தெரிவித்துள்ளனர். அழைப்பிதழ் வந்தாலும் நிகழ்ச்சியில் முக்கியத்துவம் தரப்படுமா என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகிறார்கள்.இந்த வாரத்தில் ஒரு முடிவு தெரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.