மருமகனுக்கு மனைவியை மணமுடித்த வைத்த மாமனார்.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

 
Bihar

பீகாரில் மருமகனுக்கு தனது மனைவியை மாமனார் கட்டி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின்  பங்கா மாவட்டத்தில்  சாத்ரபல் என்ற பஞ்சாயத்தில் தில்லேஷ்வர்- கீதா தேவி தம்பதி வசித்து வந்தனர். இவர்களின் மகளை அதே பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். கடந்தாண்டு சிக்கந்தரின் மனைவி இறந்துவிட்டார். இந்த நிலையில் சிக்கந்தர் தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். 

அப்போது மாமியார் கீதா தேவிக்கும் மருமகன் சிக்கந்தருக்கும் நெருக்கம் அதிகமாகி வந்துள்ளது. இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய பந்தம் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் மாமனார் தில்லேஷ்வரிடம் தெரிவித்து வந்துள்ளனர்.

dead-body

இந்நிலையில் ஒருநாள்  தனது மனைவியையும் மருமகனையும் கையும் களவுமாக மாமனார் பிடித்தார். அந்த ஊர் வழக்கப்படி, ஊர் பஞ்சாயத்தார் முன்பு இருவரையும் நிற்க வைத்து இருவருக்கும் இடையில் உள்ள உறவு குறித்து கேட்கப்பட்டது. அப்போது மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து மாமியாருக்கும் மருமகனுக்கும் மாமனார் தில்லேஷ்வரே  திருமணம் செய்து வைத்து இருவரையும் அனுப்பி வைத்தார். இதனை அந்த பகுதி மக்கள் வேடிக்கையாக பார்த்தனர். உறவு முறைகளுக்குள் இது போன்ற சங்கடமான சம்பவங்களை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் கிராம மக்கள் குழம்பினர். 

Marriage

இந்த திருமணத்தை எப்படி அங்கீகரிக்க முடியும் என்று அந்த பகுதியில் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சமூக கட்டமைப்பை சிதைக்கும் வகையில் இந்த திருமணம் நடந்திருப்பதாகவும் சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

From around the web