மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு.. நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்ற கணவன்.. பகீர் வீடியோ!!

 
Rajasthan Rajasthan

ராஜஸ்தானில் கணவன் தன் மனைவியின் ஆடைகளை களைந்து, நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. எனினும், அந்த பெண்ணுக்கு, அண்டை வீட்டில் வசிக்கும் வேறொரு நபருடன் தொடர்பு உள்ளது என கணவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், மனைவியை கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அடித்து, துன்புறுத்தி உள்ளனர். மேலும், அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து, நிர்வாண கோலத்தில் கிராமத்தில் ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர். இதனை எவரோ ஒருவர் வீடியோ எடுத்து, வெளியிட்டு உள்ளார். வீடியோ வைரலான நிலையில் போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Rajasthan

இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட் நேற்றிரவு வெளியிட்ட செய்தியில், ஒரு நாகரீக சமூகத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடம் கிடையாது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, தண்டனை அளிக்கப்படும் என தெரிவித்து உள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியா, காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வரிசையில் மாநிலம் நம்பர் ஒன் இடத்தில் காணப்படுகிறது என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். வீடியோவை யாருடனும் பகிர வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோளாகவும் சிந்தியா கேட்டு கொண்டார்.


சதீஷ் பூனியா, கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், இதனை கடுமையாக சாடியுள்ளனர். இதுகுறித்து ஷெகாவத், மகளிர் பாதுகாப்பு பற்றி கெலாட் உயர்வாக பேசி வருகிறார். ஆனால், பெண்களுக்கு எதிரான மனிதநேயமற்ற தன்மை அனைத்தும் கடந்து விட்டன. கெலாட்டை எப்போது பதவி விலகும்படி ராகுல் காந்தி கூறுவார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web