கள்ளக்காதலனை வீட்டில் தங்கவைக்க கணவரிடம் அடம்பிடித்த மனைவி.. மறுத்ததால் மனைவி எடுத்த விபரீத முடிவு

 
Uttar pradesh

உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலனை வீட்டில் அனுமதிக்க மறுத்த கணவரின் செயலுக்கு மனைவி டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் பிப்ரைச் பகுதியைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த்.  இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷில்பா (34). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், 3 குழந்தைகள் உள்ளன.

ஷில்பாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஷில்பாவும் அந்த இளைஞரும் கடந்த 7 ஆண்டுகளாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

UP

இந்த நிலையில் நேற்று ஷில்பா கடும் மனவேதனை அடைந்தார். மேலும் ஆத்திரத்தில் தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழே இறங்குமாறு கூறினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார்.

இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி அந்த பெண்ணை உயிருடன் மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.


மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி ஷில்பா கள்ளத்தொடர்பு வைத்துள்ள நபரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபரீத கோரிக்கைக்கு கணவன் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web