எனக்கு ஏன் வணக்கம் வைக்கல? பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கிய காங்கிரஸ் தலைவரின் மகன்! அதிர்ச்சி வீடியோ!

 
Jharkhand

எனக்கு ஏன் வணக்கம் வைக்கவில்லை என்று கூறி பள்ளி மாணவனை காங்கிரஸ் கட்சியின் தலைவரின் மகன் கொடூரமாக தாக்கி காலில் விழ வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் பகுதியில் உள்ள பள்ளியில் ஆகாஷ் சிங் என்ற மாணவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவரை ஜார்க்கண்ட் காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்விஜய் சிங் என்பவரின் மகன் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

Jharkhand

தனக்கு வணக்கம் வைக்குமாறு ஆகாஷ் சிங்கை ரன்வீர் சிங் தாக்கியதோடு, அவரது நண்பர்கள் ஆகாஷ் சிங்கை ரன்வீர் சிங்கின் காலில் விழ வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரன்வீர் சிங், அவரது நண்பர்கள் 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதனிடையே, இந்த சம்பவத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள ரன்விஜய் சிங், சுதந்திரமாக விசாரணை நடத்தக் கோரியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web