எங்கெங்கே தாக்குதல்கள்...  9 தீவிரவாத முகாம்கள் உள்ள இடங்களின் விவரம்!!

 
Pak

ஆபரேஷன் சித்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள் காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்திய இலக்குகள் குறித்து ஒன்றிய அரசுதகவல்களைப் பகிர்ந்துள்ளது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட ஐந்து முகாம்களின் விபரம்:

1. முசாஃபர்பாத்தில் உள்ள சாவய் நாலா முகாம்: இது லஷ்கர்-இ-தொய்பாவின் பயிற்சி முகாமாக இருந்தது. கடந்த 2024, அக்.20-ல் சோன்மார்க்கில் நடந்த தாக்குதல், 2024, அக்.24 குல்மார்க்கில் நடந்த தாக்குதல், 2025. ஏப்.22 பஹல்காமில் நடந்த தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்பட்டது.

2. முசாஃபர்பாத்தில் உள்ள சைத்னா பிலால் முகாம்: இது லஷ்கர்-இ-முகம்மதுவின் ஒரு நிலையாகும். இது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் பதுங்குகுழிகள் கொண்ட தளமாகும்.

3. கோட்லியில் உள்ள குல்பூர் முகாம்: இது ஜம்முவின் ராஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் பேஸ் கேம்ப்களாகும். பூஞ்ச் பகுதியில் 2023, ஏப்.20 மற்றும் 2024, ஜூன் 9-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் இங்கு பயிற்சி பெற்றவர்கள்.

4. பிம்பாரில் உள்ள பா்னாலா முகாம்: இங்கும் ஆயுதங்கள், வெடிப் பொருட்களைக் கையாளுதல் மற்றும் பதுங்கி வாழ்தலுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

5. கோட்லியில் உள்ள அப்பாஸ் முகாம்: லஷ்கர் இ தொய்பாவின் பையாதீன் இங்கு உருவாக்கப்பட்டது. இது 15 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்டது.

பாகிஸ்தானில் உள்ள முகாம்கள்:

6. சியால்கோட்டில் உள்ள சர்சால் முகாம்: இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீரில் நான்கு போலீஸார் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் இந்த முகாமில் தான் பயிற்சி பெற்றனர்.

7. மெஹ்மூனா ஜோயா முகாம்: பதன்கோட் விமான படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த முகாமில் இருந்து தான் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.

8. முரித்கேயில் உள்ள மார்காஸ் தைபா முகாம்: கடந்த 2008-ல் நடந்த மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் இந்த முகாமில் பயிற்சி பெற்றனர். அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி இந்த முகாமில் பயற்சி பெற்றவர்கள்.

9. பஹவல்புரில் உள்ள மார்கஸ் சுபனல்லா: இது லஷ்கர்-இ-முகம்மதுவின் தலைமையகம். ஆட்கள் சேர்ப்பு, பயிற்சி மற்றும் போதனைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.

தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தையும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையும் தவிர்த்து தீவிரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியமாகக் குறி வைத்து தாக்குதல் நடத்தி அழித்த இராணுவத்தின் செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

From around the web