செல்பி எடுக்கும்போது விபரீதம்.. 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளம்பெண்.. வைரல் வீடியோ!

 
Maharashtra

மகாராஷ்டிராவில் செல்பி எடுக்கும்போது 100 அடி பள்ளத்தில் இளம்பெண் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த நஷ்ரீன் அமீர் குரேஷி (29) என்ற பெண் சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் கனமழை காரணமாக நீர்வீழ்ச்சி மூடப்பட்டதால் அருகிலிருந்த போர்ன் காட் என்ற இடத்தில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். 

Maharashtra

அப்போது அவர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த மீட்புப்படையினர் கயிற்றை பயன்படுத்தி கீழே இறங்கி அந்த இளம் பெண்ணை மீட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மீட்கப்பட்ட அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


கடந்த மாதம் மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web