இந்தியாவின் தேசிய மொழி எது? ஸ்பெயின் நாட்டில் கனிமொழி எம்.பி. பளிச் பதில்!!

ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து உலகநாடுகளுக்கு உண்மையை தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் தலைமையில் எம்.பி.க்கள் குழு சென்றுள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் ஸ்பெயின், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்க்கு ஒரு எம்.பி. குழு சென்றுள்ளனர்.
ஸ்பெயினில் பொதுமக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கனிமொழி எம்.பியிடம், எடக்கு மடக்காக கேட்பதாக நினைத்து இந்தியாவின் தேசிய மொழி எது என்ற கேள்வியை முன்வைத்தார்.
இந்தியாவுக்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை என்ற போதிலும், கேள்வி கேட்டவரின் மனநிலையைப் புரிந்து கொண்ட கனிமொழி எம்.பி, “ வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் தேசிய மொழி” என்று கம்பீரமாக பதில் சொன்னார்.
இந்தப் பதிலை எதிர்பாராத அந்த நபரின் முகம் சுருங்கி விட்டது. கனிமொழி எம்.பி.யின் இந்த பதில் பாஜகவினரின் இந்தி மொழித் திணிப்புக்கு உலக அரங்கில் சரியான பதிலடியாகவும் அமைந்துள்ளது.