என்ன சொல்றீங்க... ஒரே நேரத்தில் இளம்பெண், அம்மா, பாட்டி, மாமியார் கர்ப்பம்.. வியப்பில் நெட்டிசன்கள்!
அம்மா, பாட்டி மற்றும் மாமியார் என ஒரே நேரத்தில் கர்ப்பமானது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
நம் வாழ்வில் ஒவ்வொருவரும் நடக்கும் தருணங்களை நினைவுகளாகவும், சிலர் புகைப்படங்கள் மூலமாகவும் பாதுகாக்க விரும்புகின்றனர். இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் போட்டோ ஷூட் செய்கிறார்கள். பிறந்த நாள், திருமண நாள், கர்ப்பம் மற்றும் புதிய குழந்தையின் வருகை என புதிய ட்ரெண்டுகள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், அதன் அடிப்படையிலான ஒரு கர்ப்ப புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி வருகிறது. அதில், 3 தலைமுறை பெண்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கின்றனர். கர்ப்பமாக உள்ள பெண்ணின் அம்மா, பாட்டி மற்றும் மாமியார் ஆகியோர் குழந்தைகளை சுமந்த படியாக ஃபோட்டோவில் இடம்பெற்றுள்ளனர். இதனை கண்ட நெட்டிசன்கள் இது எவ்வாறு சாத்தியம் என குழப்பத்தில் இருந்தனர்.
ஆனால், உண்மை என்னவென்றால் அம்மா, பாட்டி, மாமியார் எல்லாரும் வயிற்றில் தலையணையை வைத்து போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார்கள். இந்த யோசனைக்கு பின்னால் இருப்பவர் ஜிபின் எனும் புகைப்படக்காரர். அவரது மனைவி சிஞ்சு கர்ப்பமாக இருந்துள்ளார். பிரத்யேக மகப்பேறு புகைப்படம் எடுக்க முடிவு செய்த இந்த தம்பதி இவ்வாறு ட்ரை செய்துள்ளனர். அது இணையத்தில் வொர்க் அவுட்டும் ஆகியுள்ளது.